கார்த்தி நடிப்பில் 2 படங்கள் ரெடி
கோலிவுட்டில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான 'சுல்தான்' திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' மற்றும் சூர்யா தயாரிப்பில் முத்தையா இயக்கிய விருமன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி.
கைவசம் உள்ள படங்கள்
இந்த 2 படங்களின் ஷூட்டிங்கும் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார், லோகேஷ் கனகராஜுடன் கைதி 2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் கார்த்தி. இதுதவிர குக்கூ, ஜோக்கர் போன்ற படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் கார்த்தி.
சர்தார் ஷூட்டிங்
இதில் சர்தார் படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் கடந்தாண்டு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பை அண்மையில் தொடங்கினர். இதில் கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. தற்போது மைசூரில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
ஓடிடி உரிமை விற்பனை
இந்நிலையில், சர்தார் படத்தின் ஷூட்டிங் முடியும் முன்பே அப்படத்தின் ஓடிடி உரிமை பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழில் அண்மையில் அறிமுகமான ஆஹா ஓடிடி தளம் சர்தார் படத்தின் ஓடிடி உரிமையை ரூ.20 கோடிக்கு வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படக்குழு மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.
சர்தார் படக்குழு
சர்தார் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் மலையாள நடிகை ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிக்கின்றார். மேலும் வயதான தோற்றத்தில் நடிக்கும் கார்த்திக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, திலீப் சுப்புராயன் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி உள்ளார்.
இதையும் படியுங்கள்.... https://tamil.asianetnews.com/gallery/cinema/actor-santhanam-team-up-for-a-new-movie-with-ratna-kumar-r8tbu2