வெளியேற வேண்டும் கமலிடம் அடம்பிடித்த ஆயிஷா! சற்று முன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர் இவர் தான்

First Published | Nov 6, 2022, 10:37 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டு, கிட்ட தட்ட ஒரு மாதம் ஆக உள்ள நிலையில்... நிகழ்ச்சி சற்று போர் அடித்து வருவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதற்க்கு முக்கிய காரணம் கடந்த வாரம் போட்டியாளர்களுக்கு கொடுத்த சுவாரஸ்யம் இல்லாத டாஸ்க் என்றும் கூறலாம்.
 

எனவே இந்த வாரம், தரமான டாஸ்க் மூலம்... பிக்பாஸ் குழுவினர் நிகழ்ச்சியை மேலும் சுவாரஸ்யமாக்குவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், காரணம் இல்லாமல்... கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்பதற்காக போடப்படும் சண்டைகளும் சற்று குறையும் என்றே தெரிகிறது. ஏனெனில் அப்படி சண்டை போட்டு வந்த தனலட்சுமியை நிற்க வைத்து விளாசினார் கமல்.

Ajith Thunivu: அட்ராசக்க... மலேசியாவில் தூள் பறக்கும் 'துணிவு' பட புரமோஷன்..! மாஸ் காட்டும் ரசிகர்கள்..!
 

Tap to resize

பிக்பாஸ் வீட்டில் இருந்து இதுவரை மூன்று போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில்... நான்காவதாக யார்? பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என்பது போன்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இடம்பிடித்த அசீம், விக்ரமன், மற்றும் கதிரவன் காப்பாற்றப்பட நிலையில், மீதம் இருந்த ஆயிஷா மற்றும் செரீனா இவர்கள் இருவரில் ஒருவர் தான் வெளியேற உள்ளதும் உறுதியானது.

இதுகுறித்து வெளியான புரோமோவில், ஆயிஷா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே செல்ல விரும்புவதாக கமல்ஹாசன் முன்பு பளீச் என கூறினார். செரினா 50 - 50 அதாவது வீட்டுக்கு செல்லவும் மனம் உள்ளது, அதே போல் இருக்கவும் ஆசை படுவதாக கூறினார்.

Bobby Simha: 'இந்தியன் 2' படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பாபி சிம்ஹா..! வெளியான போட்டோஸ்..!
 

தற்போது, இன்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அந்த நபர் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நெட்டிசன்கள் கணித்த படி, செரீனா தான் வெளியேறியுள்ளார். ஆயிஷா காப்பாற்றப்பட்டுள்ளார். செரீனா இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை வெளியேற முக்கிய காரணம் என்றால் அது, பொம்மை டாஸ்கின் போது ஓவர் ஆக்ட்டிங் செய்தது மற்றும் அடிக்கடி ஆங்கிலம், மலையாளம் போன்ற மொழிகளில் பேசியது என்றே கூறப்படுகிறது.

Alia Bhatt: ஆலியா பட் - ரன்பீர் கபூர் ஜோடிக்கு குழந்தை பிறந்தது..! குவியும் வாழ்த்து..!

Latest Videos

click me!