நடிகர் அஜித் 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' ஆகிய இரண்டு படங்களைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக இயக்குனர் எச்.வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் இணைந்து நடித்து வரும் திரைப்படம் 'துணிவு'. கொள்ளை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள, இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் நடிகர் அஜித் தன்னுடைய டப்பிங் பணியையும் முடித்தார்.