suzane george : மைனா கொடூர வில்லி சூசனுக்கு இவ்வளவு பெரிய மகனா?

First Published | Nov 6, 2022, 7:11 PM IST

சூசன் தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலானது. அவருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா? எப்போது திருமணம் நடந்தது என பல கேள்விகளை ரசிகர்கள் தொடுத்திருந்தனர்.

suzane george mynaa

வில்லி கதாபாத்திரத்தில் வந்து ரசிகர்களை மிரட்டிய நடிகை தான் சூசன் ஜார்ஜ். கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான மைனா படத்தில் ஜெய்யிலரின் மனைவியை சுதாவாக வந்து தன நடிப்பை பதிய வைத்திருந்தார் சூசன். பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விதார்த், அமலா முக்கிய வேடங்களிலும் தம்பி ராமையா துணைவேடத்திலும் நடித்திருந்தார். 

suzane george mynaa

மலைவாழ் மக்களின் கதைக்களத்தைக் கொண்ட இந்த படம் மிகப்பெரிய வெற்றிகளை கண்டது. அதோடு பல விருதுகளையும் குவித்திருந்தது. 2010 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக வெளியாகி இருந்த இந்த படம் 2013ல் பெங்காலி பங்களாதேஷ் சைமன் சாதிக் மற்றும் மகிமா மகி நடித்த போரா முன் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதனை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டிருந்தது. 5 கோடி ரூபாயில் உருவாகியிருந்த மைனா படம் 30 கோடிகளை குவித்திருந்தது.

மேலும் செய்திகளுக்கு... vishal : ஏற்கனவே திருமணமான ஜோடிக்கு இலவச மணம் செய்து வைத்தாரா விஷால் ?

Tap to resize

suzane george mynaa

இந்த படத்திற்குப் பிறகு அமலா பாலுக்கு மிகப்பெரிய மார்க்கெட் கிடைத்தது என்றே சொல்லலாம். இந்த படத்தில் ரசிகர்களை தனது முட்டை கண்ணால் மிரட்டி இருந்தவர் தான் சூசன் ஜார்ஜ். இவரின் நடிப்பு வெகுவான பாராட்டுகளை பெற்றிருந்தது. கணவரை மிரட்டுவதும் நாயகியை துன்புறுத்துவதும் என அசத்தியிருந்தார் இவர். 

suzane george mynaa

ஆனால் இந்த படத்திற்கு பிறகு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுபோன்ற எந்த வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்கவில்லை. தொடர்ந்து துணை வேடங்களில் மட்டுமே நடித்து வந்தார் சூசன். நர்த்தகி, ரா ரா, தேசிங்குராஜா, அர்ஜுனன், காதலி, நண்பேண்டா, ராட்சசன், ஜாக்பாட், ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...varisu first single Ranjithame : முதல் இரண்டு இடங்களை பிடித்த விஜயின் அரபிக் குத்து ..ரஞ்சிதமே...

suzane george mynaa

சமீபத்தில் பிக்பாஸில் இடம் பெற்ற சேரன், சினேகன், சரவணன் உள்ளிட்டோர் இணைந்து உருவாகி இருந்த ஆனந்தம் விளையாடும் வீடு என்னும் படத்தில் சேரனின் மனைவியாக நடித்திருப்பார். அவரது நடிப்பு இந்தப் படத்தில் பாராட்டுக்களையே பெற்றிருந்தது. அதோடு விஜய் டிவிகள் சுழியம், ரோஜாக்கூட்டம், சன் டிவியில் தென்றல், அத்திப்பூக்கள், தியாகம், சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்துள்ளார் சூசன். 

suzane george mynaa

அதோடு பிக் பாஸ் சீசன் 5-ல்  இவர் கலந்து கொள்ள உள்ளதாக ஒரு தகவலும் பரவி அப்போது ட்ரெண்டாகி அவர் கலந்து கொண்டிருந்தால் இன்னொரு வனிதாவாக இருந்திருப்பார் என ரசிகர்கள் கூறி வந்தனர். இதற்கிடையே சூசன் தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலானது. அவருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா? எப்போது திருமணம் நடந்தது என பல கேள்விகளை ரசிகர்கள் தொடுத்திருந்தனர்.

Latest Videos

click me!