vishal : ஏற்கனவே திருமணமான ஜோடிக்கு இலவச மணம் செய்து வைத்தாரா விஷால் ?

First Published | Nov 6, 2022, 6:28 PM IST

விஷால் பல மாதங்களுக்கு முன்னரே திருமணம் முடிந்து விட்ட பழைய ஜோடிக்கு தற்போது இலவச திருமணம் செய்து வைத்துள்ளார் என்கிற விமர்சனம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது..

தமிழக சினிமாவுலகில்  பிரபல நடிகராக இருப்பவர் விஷால். தனது அதிரடியான நடிப்பின் மூலம் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து வைத்துள்ளார். செல்லமே என்கிற படத்தின் மூலம் அறிமுகமான இவர் முன்னதாக அர்ஜுனிடம் உதவி இயக்குனர் பணியாற்றி வந்துள்ளார். இந்த படம் வணிகரீதியில் நல்ல வெற்றியை அடைந்தது.

அடுத்து சண்டைக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை என அடுத்தடுத்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படங்களில் நடித்தார். ஆனால் இவை எதுவுமே பாக்ஸ் ஆபிஸில் எடுபடவில்லை. தொடர்ந்து பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், பூஜை,  உள்ளிட்ட படங்கள் ஓரளவு லாபத்தை கொடுத்தது. 

Vishal

தற்போது எனிமி, வீரமே வாகை சூடவா, லத்தி, துப்பறிவாளன்  உள்ளிட்ட படங்களை நடித்து முடித்துள்ளார். இதற்கிடையே  கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக விஷால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  ஏற்கனவே தலைவராக இருந்த சரத்குமார் அணியினை முறையாக கணக்கு காட்டவில்லை என குற்றம் சாட்டி இந்த அணி நின்றது.

மேலும் செய்திகளுக்கு...varisu first single Ranjithame : முதல் இரண்டு இடங்களை பிடித்த விஜயின் அரபிக் குத்து ..ரஞ்சிதமே...

Tap to resize

நாசரை தலைவராக முன்னிறுத்தி விஷால் வழிநடத்த கார்த்தி உள்ளிட்டோருடன் போட்டியிட்ட விஷால் அணி வெற்றியும் கண்டது. அதற்காக பிரம்மாண்ட தேர்தலும் நடைபெற்று. அந்த தேர்தல் தென்னிந்திய அளவில் பிரபலமும் அடைந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு மீண்டும் தேர்தல் நடைபெற்றது அந்த தேர்தலிலும் இவர்களே வெற்றி கண்டனர். அதோடு 2017 ஆம் ஆண்டு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நடிகர் சங்கத்தில் போட்டியிடுகைகள் நடிகர் சங்கத்திற்கான பிரம்மாண்ட கட்டிடத்தை கட்டி எழுப்பிய பிறகே, தான் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக விஷால் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இரண்டு முறை வெற்றி பெற்ற பிறகும் கட்டிடம் முழுமை அடையவில்லை. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு அனுஷா ரெட்டி என்பவர் உடன் இவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது ஆனால் இந்த திருமணம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில் இன்று 11 ஜோடிகளுக்கு விஷால் திருமணம் செய்து வைத்துள்ளார். சுமார் 51 பொருட்கள் அடங்கிய குடும்பத்திற்கு மிகவும் தேவையான சீர்வரிசை பொருட்களுடன் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. விஷால் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த திருமணம் மாத்தூர் பகுதிகள் நடைபெற்றுள்ளது. 

மந்திரங்கள் முழங்க விஷால் தாலி எடுத்துக் கொடுக்க 11 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்று உள்ளது. இந்நிலையில் விஷால் பல மாதங்களுக்கு முன்னரே திருமணம் முடிந்து விட்ட பழைய ஜோடிக்கு தற்போது இலவச திருமணம் செய்து வைத்துள்ளார் என்கிற விமர்சனம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது..

Latest Videos

click me!