விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான படம் தான் பீஸ்ட் இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கி இருந்தார். இதிலிருந்தது முன்னதாக அரபிக் குத்து என்னும் பாடல் வெளியாகி அட்டகாச வெற்றியை பெற்றிருந்தது. அனிருத் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி இருந்த இந்த பாடலுக்கான ப்ரோமோக்களும் வெளியிடப்பட்டிருந்தது.
arabic kuthu
பூஜா நடித்த இந்த படத்தில் ஜானி மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றி இருந்தார். அரபிய வார்த்தைகளோடு வெளியாகியிருந்த இந்த பாடல் உலகம் முழுவதும் ரில்ஸ்களாக திரும்பி வந்தன. உலக அளவில் பிரபலமான அரபிக் குத்துப்பாடல் வெளியான ஒரே நாளில் சுமார் 23.77 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருந்தது. ஆனால் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. ராணுவ வீரராக விஜய் நடித்திருந்த இந்த படத்தில் தீவிரவாதிகளிடம் அகப்பட்ட மக்களை நாயகன் காப்பாற்றும் கதைக்களம் அமைந்திருந்தது.
arabic kuthu
கதைகளில் சுவாரசியம் இல்லை என்பது குறித்த சில குற்றச்சாட்டுகளுடன் விமர்சனங்களை பெற்ற இந்த படம் போதுமான வசூலையும் பெற்றது. இதை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்னும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தில் புஷ்பா நாயகி ராஷ்மிகா மந்தனா ஹீரோயினியாக நடிக்க ஷாம், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, குஷ்பூ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்த வருகின்றனர்.
முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் படமாக அமைந்துள்ள இதன் பர்ஸ்ட் லுக்குகள் மூன்று அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சென்னை, ஹைதராபாத், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற படப்பிடிப்புத்தள புகைப்படங்களும் வெளியாகியிருந்தது. இந்நிலையில் படத்தின் முதல் சிங்குளாக ரஞ்சிதமே பாடல் நேற்று வெளியானது. விவேக் வரிகளில் தமன் இசையில் இந்த பாடல் வெளியானது.
பாடல் வெளியான 22 மணி நேரத்தில் 16.40 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மூன்றாவது இடத்தில் பெண்ணி பாடலும், நான்காவது இடத்தில் கலாவதி பாடலும், ஐந்தாவது இடத்தில் ஜாலியோ ஜிம்கானா பாடலும் இடம் பெற்றுள்ளது. இந்த தகவலை விஜய் ரசிகர்கள் ட்ரண்டாக்கி வருகின்றனர்.
இதற்கிடையே ரஞ்சிதமே பாடல் காப்பியடிக்கப்பட்ட வரிகளையும் இசையையும் கொண்டுள்ளது என புகார் எழுந்துள்ளது. அதாவது மொச்ச கொட்ட பல்லழகி என்னும் பழைய பாட்டின் ரீமேக் போல தோன்றுவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.