பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கு பெறும் போட்டியாளர்களின் முழு லிஸ்ட் இதுவா? அதிரப்போகுது பிக்பாஸ் வீடு!

First Published | Oct 2, 2022, 3:04 PM IST

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விரைவில் துவங்க உள்ள நிலையில், இதில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் குறித்த லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது.
 

உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 6 நிகழ்ச்சி இன்னும் ஒரு சில தினங்களில் துவங்க உள்ளது. அதாவது ஆக்டோபர் 9ஆம் தேதி இந்த நிகழ்ச்சி துவங்க உள்ளதாக, விஜய் டிவி தரப்பில் இருந்து அதிகார பூர்வ தகவலும் வெளியாகியுள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, பிக்பாஸ் வீடு கட்டமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், தற்போது அந்த பணி நிறைவடைந்து விட்டதாக கூராடுகிறது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள பிரபலங்கள் குறித்த பட்டியலை பிக்பாஸ் குழுவினர் மிகவும் ரகசியமாக வைத்துள்ள போதும், போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியான வண்ணம் உள்ளது.

மேலும் செய்திகள்: பல உதவிகள் செய்த எனக்கே இந்த நிலைமை..? நீக்க பட்ட பின்னர்... நடிகர் சங்கத்தை பற்றி புட்டு புட்டு வைத்த உதயா!
 

Tap to resize

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் பற்றிய விவரம், ஏறக்குறைய உறுதியான நிலையில், தற்போது 14 போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதன்படி விஜய் டிவி தொகுப்பாளர் வி.ஜே. ரக்ஷன், பாரதி கண்ணம்மா சீரியல் நாயகி ரோஷினி, ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனா, சீரியல் நடிகை ஸ்ரீநிதி, சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி, ரவீந்தர், மஹாலக்ஷ்மி, சரவணன் மீனாட்சி ரச்சிதா மஹாலக்ஷ்மி, விஜே அஞ்சனா,  சீரியல் நடிகர் மணிகண்டன், மைனா நந்தினி, ஜி.பி. முத்து, ஜீ தமிழ் சீரியல் நடிகை ஆயிஷா உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: சினிமாவை அரசியல்மயமாக்குவது முக்கியம்... திருமாவளவன் மணிவிழாவில் வெற்றிமாறன் பேச்சு!
 

இதில் ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால்... பிக்பாஸ் சீசன் 6 தமிழ் நிகழ்ச்சி துவங்கும் அன்றைய தினமே... யார் யார் போட்டியாளராகள் என்பது தெரியவரும். அதே நேரத்தில் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றால் பிக்பாஸ் வீடு சும்மா அதிரும் என்பதில் சந்தேகமில்லை.

Latest Videos

click me!