தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜ ராஜ சோழன் இந்து இல்லையா? - வெற்றிமாறன் பேச்சால் கிளம்பிய சர்ச்சை

First Published Oct 2, 2022, 2:23 PM IST

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் மணிவிழாவில் கலந்துகொண்ட இயக்குனர் வெற்றிமாறன் ராஜ ராஜ சோழன் குறித்து பேசியது சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகி உள்ளது. 

தமிழ் திரையுலகில் தரமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி தொடர்ந்து வெற்றி வாகை சூடி வருபவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் இதுவரை வெளிவந்த படிக்காதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் ஆகிய 5 படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன்.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் 60-வது பிறந்தநாளை அக்கட்சியினர் மணிவிழாவாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி சமத்துவ மக்கள் எழுச்சி, ஒன்று சேர் என்கிற கலை திருவிழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குனர் வெற்றிமாறனும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இதையும் படியுங்கள்... பல உதவிகள் செய்த எனக்கே இந்த நிலைமை..? நீக்க பட்ட பின்னர்... நடிகர் சங்கத்தை பற்றி புட்டு புட்டு வைத்த உதயா!

அப்போது வெற்றிமாறன் ராஜ ராஜ சோழன் குறித்து பேசியது சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகி உள்ளது. அவர் பேசியதாவது : “கலையை சரியாக கையாள தவறினால் நம்முடைய அடையாளங்கள் பறிக்கப்படும். தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்களை பறித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுக்கிறார்கள். 

அதேபோல் ராஜ ராஜ சோழனை ஒரு இந்து அரசனாக்குவது என தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. சினிமாவிலும் நிறைய அடையாளங்களை எடுக்கிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவோடு இருக்க வேண்டும்” என பேசி இருந்தார். அவரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... தமிழ்நாட்டில் முதலிடம் மிஸ் ஆனாலும்... வெளிநாட்டில் அஜித், விஜய் படங்களை தட்டித்தூக்கிய பொன்னியின் செல்வன்

click me!