கம்பேக் கொடுக்கும் கமல்; பிக் பாஸில் இருந்து விலகுகிறாரா விஜய் சேதுபதி?

First Published | Nov 26, 2024, 12:08 PM IST

Bigg Boss Tamil : பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் நிலையில், கமல்ஹாசனும் பிக்பாஸில் கம்பேக் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Kamal vs Vijay sethupathi

தமிழ்நாட்டில் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனதற்கு காரணம் கமல்ஹாசன் தான். அவர் தொகுத்து வழங்கிய விதமும், மக்களின் குரலாக அவர் ஒலித்ததும் தான் அந்நிகழ்ச்சியில் அவர் தொடர்ந்து தொகுப்பாளராக பணியாற்ற காரணமாக இருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியை 7 ஆண்டுகளாக தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த ஆண்டு அந்நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் அவருக்கு பதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த சீசனில் தொகுப்பாளராக களமிறங்கி உள்ளார்.

Vijay sethupathi

விஜய் சேதுபதி, கமல்ஹாசனை போல் இல்லாமல், எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட நபர்களை நிற்க வைத்து அவர்கள் மூஞ்சில் அடித்தவாரு ஓப்பனாகவே கேள்விகளை கேட்டுவிடுகிறார். இது மக்களை கவர்ந்திருந்தாலும், அவர் போட்டியாளர்களிடம் இந்த அளவுக்கு கடுமையாக நடந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்கிற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய சீசன்களில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

இதையும் படியுங்கள்... ஹாப்பியாக எலிமினேட் ஆன வர்ஷினிக்கு சம்பளத்தை வாரி வழங்கிய பிக் பாஸ்!

Tap to resize

Bigg Boss Vijay Sethupathi

ஆனால் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் மிஸ் ஆவதால், இதுவரை நடைபெற்ற சீசன்களில் இந்த சீசன் தான் மிகவும் மோசம் என்கிற பெயரையும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி எடுத்துள்ளது. 50 நாட்களைக் கடந்தும் ஆட்டத்தில் ஆரவாரம் இல்லாததால், வீட்டுக்கு நடுவோ போடப்பட்ட கோட்டையெல்லாம் நீக்கிவிட்டு, இனி ஆண் - பெண் என இல்லாமல், அனைவரும் ஒன்றாக கேம் விளையாடலாம் என அறிவித்துள்ளார் பிக் பாஸ்.

Kamal, Vijay sethupathi

இப்படி நிகழ்ச்சி டல் அடிப்பதால், விஜய் சேதுபதிக்கு பதில் கமல்ஹாசனை மீண்டும் களமிறக்க வேண்டும் என்கிற குரலும் சமூக வலைதளங்களில் எழுந்த வண்ணம் உள்ளது. அதற்கு ஏற்றார் போல் தற்போது ஒரு அப்டேட்டும் வெளியாகி உள்ளது. அதன்படி கமல்ஹாசன் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பு இருப்பதாக மக்கள் நீதி மய்யத்தின் மாநில துணைத்தலைவர் கோவை தங்கவேலு கூறி இருக்கிறார்.

Kamalhaasan Replace Vijay Sethupathi in Bigg Boss

அதன்படி, கமல்ஹாசன் ஏஐ தொழில்நுட்பம் பற்றி படிக்க சென்றதன் காரணமாகவே அவரால் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கமல்ஹாசனால் கலந்துகொள்ள முடியவில்லை, அடுத்த சீசன் முதல் மீண்டும் அவர் நிகழ்ச்சியில் இணைய வாய்ப்பு இருப்பதாக அவர் கூறி இருக்கிறார். இந்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தினாலும், விஜய் சேதுபதியின் நிலைமை என்ன ஆகும்? இந்த சீசனோடு பிக் பாஸை விட்டு விஜய் சேதுபதி விலகுகிறாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

இதையும் படியுங்கள்... 2024-ல் ஓவர் பில்டப்போடு வெளியாகி அட்டர் பிளாப் ஆன தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ

Latest Videos

click me!