Pawan Kalyan
திரைத்துறையில் விவாகரத்து என்பது சர்வ சாதரணமான விஷயம். தங்கள் துணை உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் உடனே அவரை விவாகரத்து அடுத்த திருமணம் செய்து கொள்கின்றனர். சிலர் 2-வது திருமணமும் தோல்வியில் முடிந்தால் 3-வது திருமணம் கூட செய்து கொள்கின்றனர். அந்த வகையில் இரண்டு தோல்வி அடைந்த திருமணங்களுக்குப் பிறகு ஒரு ரஷ்ய மாடலை பிரபல நடிகர் காதலித்து திருமணம் செய்துள்ளார்.
Pawan Kalyan
இந்த நடிகரால் மிகவும் ஈர்க்கப்பட்ட ரஷ்ய மாடல் அன்னா தனது நாட்டை விட்டு வெளியேறி இந்தியா வந்தார். மறுபுறம், இந்த நடிகர், மத அல்லது சமூக நெறிமுறைகளால் பாதிக்கப்படாமல், அந்த ரஷ்ய பெண்ணை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.
இந்த நடிகர் ஆந்திராவின் மிகப்பெரிய திரைப்பட நட்சத்திரங்களில் ஒருவர். சூப்பர் ஸ்டார் குடும்பத்தில் இருந்து வந்த இவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி சகோதரர். நடிகர்கள் வருண் தேஜ், நிஹாரிகா கொனிடேலா, ராம் சரண் ஆகியோர் இவரின் உறவினர்கள் கான். அந்த நடிகர் வேறுயாருமில்லை. நடிகர் பவன் கல்யாண் தான் அவர். த
Pawan Kalyan
னது ரசிகர்களால் 'பவர் ஸ்டார்' என்று அழைக்கப்படும் பவன், வக்கீல் சாப், பீம்லா நாயக், கோபாலா கோபாலா, கப்பர் சிங், குஷி போன்ற சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். பவன் கல்யாண் 2011 ஆம் ஆண்டு ‘டீன் மார்’ திரைப்படத்தின் செட்டில் ரஷ்ய மாடல் நடிகையான அன்னா லெஷ்னேவாவை முதன்முதலில் சந்தித்தார். இருவருக்கும் காதல் மலரவே இந்த ஜோடி சுமார் இரண்டு வருடங்கள் டேட்டிங் செய்து 2013-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
Pawan Kalyan
பவன் கல்யாண் - அன்னா தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தங்கள் திருமணத்திற்குப் பிறகு, அன்னா லெஷ்னேவாவின் முதல் கணவருக்கு பிறந்த மகளையும் பவன் கல்யாண் தத்தெடுத்து, தனது மற்ற மூன்று குழந்தைகளுடன் வளர்த்தார். 2017 ஆம் ஆண்டில், இந்த தம்பதியினர் தங்கள் முதல் குழந்தையை ஒன்றாக வரவேற்றனர்.
பவன் கல்யானின் அரசியல் பயணத்தில் அவருக்கு ஆதரவாக இருந்தார் அன்னா. இன்று அவர் ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வராகவும், பாஜகவின் பெரிய ஆதரவாளராகவும் இருக்கிறார்.
Pawan Kalyan
பவன் கல்யானின் அரசியல் பயணத்தில் நடிகரை ஆதரித்தார். இன்று அவர் ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வராகவும், பாஜகவின் பெரிய ஆதரவாளராகவும் இருக்கிறார். பவன் கல்யாண் அரசியல் பயணத்தை பிரதமர் நரேந்திர மோடியும் வெகுவாக பாராட்டினார். மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு அமோக வெற்றியைத் தேடித் தந்ததில் நடிகரின் பங்களிப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.
Pawan Kalyan
பவன் கல்யாண் முதன்முதலில் 1997 இல் நந்தினி என்ற பெண்ணை மணந்தார். 10 ஆண்டுகள் நீடித்த இந்த திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். தொடர்ந்து பவன் கல்யாண் நடிகை ரேணு தேசாய் 2009 இல் திருமணம் செய்து கொண்டார், மேலும் இந்த தம்பதிக்கு அகிரா நந்தன் மற்றும் ஆத்யா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். இந்த ஜோடி 2012 இல் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.