Kamal Haasan: உலக நாயகன் கமல்ஹாசன், மறைந்த நடிகர் ரோபோ ஷங்கரின் கடைசி ஆசையை நிறைவேற்றும் விதமாக, எடுத்துள்ள அதிரடி முடிவு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பான 'கலக்க போவது யார்' நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னரே ரோபோ ஷங்கர், ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் கண்டுகொள்ளப்படாத பிரபலமாகவே இருந்தார். ஆனால் விஜய் டிவிக்கு வந்த பின்னர், இவரது திறமைகள் வெளியுலகிற்கு தெரியவந்தது. எனவே அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் ஒரு பக்கம் குவிய, மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு ரசிகர்களை சிரிக்க வைத்தார். ஆரம்ப காலங்களில் உள்ளூரில் மட்டுமே இவரது கலைநிகழ்ச்சிகள் நடந்த நிலையில், வெள்ளித்திரை என்ட்ரிக்கு பின்னர் வெளிநாடுகளிலும் இவரது கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதன் மூலம் மிகக்குறுகிய காலத்தில் பேர், புகழ், மட்டும் இன்றி இவரின் வாழ்வாதாரமும் உயர்ந்தது.
ரோபோ ஷங்கர் கமல்ஹாசனின் தீவிர ரசிகராக இருந்த போதும், இதுவரை ஒரு படத்தில் கூட அவருடன் நடிக்கவில்லை. ஆனால் விஜய், அஜித், தனுஷ், போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். ரோபோ ஷங்கரை தொடர்ந்து இவரின் ஒரே மகளான இந்திரஜா ஷங்கரும், விஜய் நடித்த 'பிகில்', கார்த்தி நடித்த 'விருமன்' போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து இந்திரஜா தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்த கையேடு, தன்னுடைய மாமா கார்த்திக் என்பவரை காதலித்து கரம் பிடித்தார். திருமணத்திற்கு பின்னர் 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் கலந்து கொண்டனர். அப்போது குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை படுவதாகவும், எனவே குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போட போவதில்லை என கூறி ஆச்சர்யப்படுத்தினார். அதற்க்கு ஏற்ற போலவே, இந்த நிகழ்ச்சியில் இவர்கள் போட்டியாளராக இருந்த போதே இந்திரஜா கர்ப்பமானார். இதுவே இவர்கள் நிகழ்ச்சியை விட்டு வெளியேற காரணமாகவும் அமைந்தது. பின்னர் இந்திரஜா - கார்த்திக் ஜோடிக்கு இந்த ஆண்டு அழகிய ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது.
46
ரோபோ பேரனுக்கு பெயர் சூட்டிய கமல்!
ரோபோ ஷங்கரின் குடும்பமே தங்களின் பேரனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர். குறிப்பாக ரோபோ ஷங்கருக்கு தன்னுடைய பேரன் மீது கொள்ளை பிரியம். ரோபோ ஷங்கரின் பேரனுக்கு நட்சத்திரம் என பெயர் சூட்டியது கூட கமல்ஹாசன் தான்.
56
ரோபோவின் நிறைவேறாத ஆசை:
யாரும் எதிர்பாராத நேரத்தில், ரோபோ ஷங்கர் திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டு கடந்த வாரம் உயிரிழந்த நிலையில், இவரின் கடைசி ஆசை பற்றி அவரது நண்பர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார். அதாவது ரோபோ ஷங்கருக்கு ஒரே ஒரு படத்திலாவது, கமல்ஹாசனுடன் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். ஒரு வழியாக இதற்கான நேரம் கூடி வந்து, அதற்கான பேச்சு வார்த்தைகளும் சென்று கொண்டிருந்தது. ஆனால் ரோபோ ஆசை நிறைவேறுவதற்கு முன்பே அவர் உயிரிழந்து விட்டதால், அவரது கனவு நிறைவேறாமல் போனது.
66
கமல்ஹாசன் எடுத்த அதிரடி முடிவு:
இந்த நிலையில் தான் தன்னுடைய தீவிர ரசிகனான ரோபோ ஷங்கரின் கடைசி ஆசையை நிறைவேற்ற கமல் எடுத்துள்ள முடிவு பற்றி தற்போது கோலிவுட் வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. அதாவது கமல்ஹாசன் தன்னுடைய அடுத்த படத்தில், ரோபோவின் ஆசையை நிறைவேற்றும் விதமாக, ரோபோவின் மகள் இந்திரஜாவை ஒரு முக்கிய ரோலில் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம். கமலின் இந்த முடிவை ரசிகர்கள் பலர் வியர்ந்து பாராட்டி வருகிறார்கள்.