நடிகர் அஜித்குமாரின் சினிமா பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் காதல் மன்னன். சரண் இயக்கிய இப்படம் கடந்த 1998-ம் ஆண்டு திரைக்கு வந்தது. இப்படத்தில் நகைச்சுவை நடிகர் விவேக், பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பரத்வாஜ் இசையமைத்திருந்த இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இப்படத்தின் மூலம் தான் நடிகர் அஜித், சாக்லேட் பாய் ஆக உயர்ந்தார். நடிகர் அஜித்துக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படமும் இதுதான்.
24
காதல் மன்னன் நாயகி
காதல் மன்னன் படத்தின் சக்சஸுக்கு முக்கிய காரணம், அப்படத்தில் அஜித் மற்றும் அப்படத்தின் நாயகி மானு இடையேயான கெமிஸ்ட்ரி தான். நடிகை மானு இப்படத்தின் மூலம் தான் சினிமாவில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். ஒரே படத்தில் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனாலும் அப்படத்திற்கு பின்னர் அவர் ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போனார். காதல் மன்னன் படத்திற்கு பின் சினிமாவை விட்டு விலகிய மானு திருமணம் செய்துகொண்டு சிங்கப்பூரில் கணவருடன் செட்டில் ஆனார். 16 ஆண்டுகள் இந்தியா பக்கமே தலைகாட்டாமல் இருந்த அவர், அதன் பின்னர் ‘என்ன சத்தம் இந்த நேரம்’ என்கிற படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். ஆனால் அப்படம் சரியாக போகாததால் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார்.
இந்த நிலையில், காதல் மன்னன் படத்தில் தான் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆனதன் பின்னணியில் உள்ள ஒரு சீக்ரெட் சம்பவத்தை பற்றி நடிகை மானு பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது : “என்னோட பேமிலியில் யாருமே சினிமாவில் நடித்ததில்லை. என் குடும்பத்தில் பெரும்பாலானவர்கள் டாக்டர்கள் தான். என்னுடைய தாத்தா பெயர் கோபிநாத் பர்டோலால், அவர் அசாம் மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்திருக்கிறார். நான் என்னுடைய பள்ளி படிப்பதற்காக தான் மெட்ராஸ் வந்தேன்.
44
மனதில் நிற்கும் திலோத்தமா கேரக்டர்
நடிகர் விவேக்கும், இயக்குனர் சரணும் தான் நான் ஸ்கூல் படிக்கும்போதே என்னை கட்டாயப்படுத்தி காதல் மன்னன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க வச்சாங்க. அப்படத்திற்கு பின்னர் நான் சினிமாவை விட்டே விலகிவிட்டேன். படிப்பு தான் முக்கியம் என்பதால் அதில் முழு கவனம் செலுத்தினேன். படிப்பை முடித்ததும் திருமணம் செஞ்சுக்கிட்டு செட்டில் ஆகிட்டேன். என் கணவர் சிங்கப்பூரில் மருத்துவராக உள்ளார்” என நடிகை மானு அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். தமிழில் ஒரே ஒரு படத்தில் நடித்தாலும் அவர் நடித்த திலோத்தமா கேரக்டர் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.