ரசிகர்களால மில்க் பியூட்டி என அழைக்கப்படுபவர் தமன்னா. தற்போது பாலிவுட் படங்களில் பிசியாக நடித்து வரும் தமன்னா, மும்பையில் கருப்பு நிற உடையில் ஷாப்பிங் வந்த போது எடுத்த புகைப்படங்கள் வைரலாகின்றன. அப்போது அவர் மேக்கப் எதுவும் இல்லாமல் மிகவும் எளிமையாக காட்சியளித்தார்.
25
மேக்கப் இல்லாத தமன்னா
மேக்கப் இல்லாமல் தமன்னா வந்தது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது மட்டுமின்றி அவரது இயற்கையான அழகு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேக்கப் போடாவிட்டாலும் அவர் அழகாக இருப்பதாக நெட்டிசன்கள் வர்ணித்து வருகின்றனர்.
35
தமன்னாவின் தோற்றம் குறித்த விமர்சனங்கள்
தமன்னாவின் மேக்கப் இல்லாத தோற்றத்தை சிலர் விமர்சித்தும் வருகின்றனர். மேக்கப் போடாததால் அவரது முகத்தில் கருவளையங்கள் தெரிவதாக சிலர் கூறியுள்ளனர். சிலரோ அவரது இந்த லுக் அவரை வயதானவர் போல காட்டுவதாக கூறி வருகின்றனர்.
தமன்னாவின் எளிமையை பலர் பாராட்டியுள்ளனர். முன்னணி நடிகையாக இருந்தும் எளிமையாக இருப்பதை ரசிகர்கள் மெச்சியுள்ளனர். விரைவில் நடிகை தமன்னா திருமணம் செய்துகொள்ள உள்ளார். அவர் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் கடந்த சில ஆண்டுகளக டேட்டிங் செய்து வரும் நிலையில், கடந்த ஆண்டு இவர்கள் தங்கள் காதலை உறுதி செய்தனர். இந்த ஆண்டு இறுதிக்குள் இருவரும் கரம்பிடிக்க உள்ளனர். விஜய் வர்மாவை விட நடிகை தமன்னா அதிக சம்பளம் வாங்கி வருகிறார்.
55
தமன்னாவின் அடுத்த படங்கள்
தமன்னா தமிழில் கடைசியாக அரண்மனை 4 திரைப்படத்தில் நடித்திருந்தார். சுந்தர் சி இயக்கிய இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. இதையடுத்து அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை நெல்சன் இயக்க உள்ளார். ஜெயிலர் முதல் பாகத்தில் தமன்னா ஆடிய காவாலா பாடல் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதேபோல் ஜெயிலர் 2 படத்திலும் அவரின் கவர்ச்சி நடனம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.