விடாமுயற்சியை கொண்டாடும் ரசிகர்கள் – 6 நாட்களில் ரூ.113.25 கோடி வசூல் குவித்து சாதனை!

Published : Feb 12, 2025, 08:10 AM IST

Vidaamuyarchi Box Office Collection Day 6 Report : அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி நாளுக்கு நாள் வெற்றி நடை போட்டு வரும் நிலையில் உலகளவில் 6 நாட்களில் மட்டும் ரூ.113.25 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது.

PREV
15
விடாமுயற்சியை கொண்டாடும் ரசிகர்கள் – 6 நாட்களில் ரூ.113.25 கோடி வசூல் குவித்து சாதனை!
விடாமுயற்சியை கொண்டாடும் ரசிகர்கள் – 6 நாட்களில் ரூ.113.25 கோடி வசூல் குவித்து சாதனை!

Vidaamuyarchi Box Office Collection Day 6 Report in Tamil : தமிழ் சினிமாவின் மாஸ் நட்சத்திரம் அஜித் குமார். வருடத்திற்கு ஓரிரு படங்களில் நடித்து வெளியிட்டு வருகிறார். 2023ல் வெளியான துணிவு படத்திற்கு 2024 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் ஒரு படம் கூட வெளியாகவில்லை. இந்த நிலையில் தான் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்த விடாமுயற்சி படம் பிப்ரவரி 6ஆம் தேதி திரைக்கு வந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தள்ளிப்போன நிலையில் பிப் 6ஆம் தேதி வெளியானது. விடாமுயற்சி கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. முதல் 2 நாட்களில் மட்டும் சரிவிலிருந்த விடாமுயற்சி படத்தின் வசூல் அதன் பிறகு அதிகரிக்க தொடங்கியது.

25
விடாமுயற்சியை கொண்டாடும் ரசிகர்கள் – 6 நாட்களில் ரூ.113.25 கோடி வசூல் குவித்து சாதனை!

படம் வெளியாகி 6 நாட்கள் கடந்த நிலையில் உலகளவில் ரூ.113.25 கோடி வரையில் வசூல் குவித்து சாதனை படைத்து வருகிறது. இந்தியாவில் ரூ.78.05 கோடி வசூல் குவித்த விடாமுயற்சி தமிழக வசூலில் ரூ.67.09 கோடி வரையில் வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் மட்டும் ரூ.35.2 கோடி வசூல் குவித்துள்ளது. விடாமுயற்சி படத்தின் வசூலானது நாள்தோறும் ஏற்ற இறக்கங்களுடன் பாக்ஸ் ஆபிஸில் நிலையாகவே உள்ளது. என்னதான் பிரேக்டவுன் படத்தின் ரீமேக்காக இருந்தாலும் இது அஜித்திற்கான படமாகே 2ஆம் பாதியில் காட்டப்படுகிறது.

35
விடாமுயற்சியை கொண்டாடும் ரசிகர்கள் – 6 நாட்களில் ரூ.113.25 கோடி வசூல் குவித்து சாதனை!

முதல் பாதியில் அஜித் மற்றும் த்ரிஷாவின் காதல் காட்சியில் கொஞ்சம் தொய்வு இருந்தாலும் 2ஆம் பாதியில் வரும் அஜித்தின் ஆக்‌ஷன் காட்சியில் எந்த பங்கமும் இல்லை. சாக்னில்க் அறிக்கையின்படி விடாமுயற்சி 6ஆவது நாளில் ரூ.3.29 கோடி வசூல் குவித்துள்ளது. இது 5ஆவது நாளில் ரூ.3 கோடியாக இருந்தது. தெலுங்கு சினிமாவில் ரூ.1.71 கோடியை எட்டியுள்ளது. 6ஆவது நாளில் தெலுங்கில் ரூ.11 லட்சம் வரையில் வசூலித்துள்ளது. ரூ.350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் தயாரிப்பாளருக்கு லாபத்தை பெற்று தருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

45
விடாமுயற்சியை கொண்டாடும் ரசிகர்கள் – 6 நாட்களில் ரூ.113.25 கோடி வசூல் குவித்து சாதனை!

ஆனால், வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு 10க்கும் அதிகமான படவா, 2கே லவ் ஸ்டோரி, பேபி அண்ட் பேபி, காதல் என்பது பொது உடைமை, ஃபயர், ஒத்த ஓட்டு முத்தையா உள்பட சிறிய பட்ஜெட் படங்கள் என்று கிட்டத்தட்ட 10 க்கும் அதிகமான படங்கள் திரைக்கு வருகின்றன. அப்படியிருக்கும் போது விடாமுயற்சி படத்தின் வசூல் பாதிக்கப்பட்ட வாய்ப்புகள் இருக்கிறது. எனினும், தமிழக வசூலில் விடாமுயற்சி எப்படியும் ரூ.100 கோடி வசூல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் ரூ.113.25 கோடி வசூல் குவித்ததன் மூலமாக விடாமுயற்சி படமானது வீரம், மங்காத்தா, என்னை அறிந்தால், ஆரம்பம், நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களின் வசூலை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

55
விடாமுயற்சியை கொண்டாடும் ரசிகர்கள் – 6 நாட்களில் ரூ.113.25 கோடி வசூல் குவித்து சாதனை!

விடாமுயற்சி படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லீ படமும் இந்த ஆண்டு திரைக்கு வர இருக்கிறது. மே 1 ஆம் தேதி அஜித் தன்னுடைய 54ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அன்றைய தேதியில் குட் பேட் அக்லீ படம் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரையில் அஜித் எந்த படத்திலும் கமிட்டாகாத நிலையில் இனி 2026ஆம் ஆண்டு தான் அஜித் படம் குறித்து அறிவிப்பு வெள்யாக வாய்ப்புகள் இருக்கிறது. தற்போது அஜித் கார் ரேஸ் தொடர்களில் பிஸியாக இருக்கும் நிலையில் 9 மாதங்களுக்கு சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்க முடிவு செய்திருப்பதாக அவரே அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories