ராயன் படத்தின் வெற்றிக்கு பின்னர் தனுஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இப்படத்தின் மூலம் நடிகர் தனுஷின் அக்கா மகன் பவிஷ் நாயகனாக அறிமுகமாகி உள்ளார். மேலும் இப்படத்தில் நாயகியாக குட்டி நயன் அனிகா சுரேந்திரன் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் வருகிற பிப்ரவரி 21ந் தேதி திரைக்கு வர உள்ளது.
24
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆடியோ லாஞ்ச்
இந்நிலையில், அப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குனர் தனுஷ் பங்கேற்கவில்லை. அவர் வேறு பட ஷூட்டிங்கில் பிசியாக இருந்ததால் இப்பட விழாவில் கலந்துகொள்ள முடியாமல் போனது. இருப்பினும் இயக்குனர்கள் செல்வராகவன், லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து, போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா, அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் பேசிய இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், இப்படத்திற்கு தான் சம்பளமே வாங்காமல் பணியாற்றி உள்ளதாக தெரிவித்திருக்கிறார். தான் ஏற்கனவே இப்படத்தை பார்த்துவிட்டதாக கூறியுள்ள அவர், படம் நிச்சயம் ஹிட் அடிக்கும் என்கிற நம்பிக்கை இருப்பதால், ரஜினியின் ஜெயிலர் படம் ஹிட்டான பின்னர் இயக்குனர், இசையமைப்பாளருக்கு கார் வழங்கியது போல், இப்பட வெற்றிக்கு பின்னர் தயாரிப்பாளர் எங்களுக்கு பரிசு வழங்குவார் என எதிர்பார்ப்பதாக கூறி இருக்கிறார்.
44
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் பாட்டு சூப்பர் ஹிட்
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்திற்காக ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்த பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்துள்ளன. அதிலும் இப்படத்தின் முதல் சிங்கிளாக வெளிவந்த கோல்டன் ஸ்பேரோ பாடல் யூடியூபில் வைரல் ஹிட் அடித்து 100 மில்லியனுக்கு மேல் பார்வைகளை பெற்றிருக்கிறது. இப்படி ஒரு சூப்பர் ஹிட் ஆல்பத்தை கொடுத்த ஜிவி பிரகாஷுக்கு இப்படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான தனுஷ் சம்பளமே கொடுக்காதது சற்று ஆச்சர்யமாக தான் இருக்கிறது.