ஆண் வாரிசு கேட்கும் சிரஞ்சீவி; விளாசும் நெட்டிசன்கள்!

Published : Feb 12, 2025, 08:35 AM ISTUpdated : Feb 12, 2025, 12:10 PM IST

Chiranjeevi Desires Grandson : தெலுங்கு சினிமாவின் மாஸ் ஹீரோவான சிரஞ்சீவி பெண்கள் குறித்து பேசியது இப்போது சர்ச்சையாகி வருகிறது. தன்னுடைய குடும்பமாக இருந்தாலும் இப்படி பேசியிருக்க கூடாது என்று அவரது கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

PREV
15
ஆண் வாரிசு கேட்கும் சிரஞ்சீவி; விளாசும் நெட்டிசன்கள்!
சிரஞ்சீவி குடும்பம்

Chiranjeevi Desires Grandson : தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சிவீ இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். பெண்கள் குறித்து அவர் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சோஷியல் மீடியாவில் கண்டனத்துக்குரிய விசயமாக மாறி வருகிறது. தன்னுடைய குடும்பமாக இருந்தாலும் கூட சிரஞ்சீவி அப்படி பேசியிருக்க கூடாது என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். என்ன நடந்தது? சிரஞ்சீவி என்ன சொன்னார்? என்பதைப் பார்ப்போம். 

த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி! என்ன நடந்தது?
 

25
வீட்டில் எல்லோருமே பெண்கள்; பேத்திகளே அதிகம், பேரன் வேண்டும் என்று ஆசைப்பட்ட சிரஞ்சீவி!

சமீபத்தில், பிரம்மானந்தம் நடித்த `பிரம்மா ஆனந்தம்` படத்தின் முன்னோட்ட நிகழ்வில் சிரஞ்சீவி கலந்து கொண்டார். அப்போது, ராம் சரணின் மகள் கிளிங்காரா குறித்து பேசப்பட்டது. தொகுப்பாளினி சுமா, கிளிங்காராவின் தாத்தாவைக் காட்டுங்கள் என்றார். அப்போது சிரஞ்சீவி, வீட்டில் எல்லாப் பெண்களும் இருக்கிறார்கள், சில சமயங்களில் பெண்கள் விடுதி காப்பாளராக இருப்பது போல் இருக்கிறது என்றார். இந்த முறையாவது ஒரு ஆண் குழந்தையை கொடு என்று சரணிடம் கேட்டார். தங்கள் வாரிசைத் தொடர ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று சிரஞ்சீவி விரும்பினார்.

35
வீட்டில் எல்லோருமே பெண்கள்; பேத்திகளே அதிகம், பேரன் வேண்டும் என்று ஆசைப்பட்ட சிரஞ்சீவி!

மீண்டும் பெண் குழந்தை பிறக்குமோ என்ற பயம் இருப்பதாகவும் சிரஞ்சீவி கூறினார். வாரிசு வேண்டும் என்று சிரஞ்சீவி விரும்புவதாகவும், அதே நேரத்தில் வீட்டில் எல்லாம் பெண்களாக இருப்பதால் ஒருவிதத்தில் ஆண் குழந்தை இல்லாத குறையை உணர்வதாகவும் அவரது கருத்திலிருந்து தெரிகிறது. இதனால், சிரஞ்சீவியின் கருத்து சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சிரஞ்சீவி நகைச்சுவையாகப் பேசியிருந்தாலும், எதிர்ப்பாளர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.

45
வீட்டில் எல்லோருமே பெண்கள்; பேத்திகளே அதிகம், பேரன் வேண்டும் என்று ஆசைப்பட்ட சிரஞ்சீவி!

உங்கள் உண்மையான மனநிலையை வெளிப்படுத்திவிட்டீர்கள் என்று கூறுகின்றனர். இது குறுகிய மனப்பான்மை என்றும், இந்தக் கருத்தின் மூலம் அவர் யார் என்பது புரிகிறது என்றும் கூறி வருகின்றனர். சிரஞ்சீவிக்கு மூன்று குழந்தைகள். சுஷ்மிதா, ராம் சரண், ஸ்ரீஜா. சுஷ்மிதாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள், ஸ்ரீஜாவுக்கும் இரண்டு பெண் குழந்தைகள். சமீபத்தில் ராம் சரணுக்குக் கிளிங்காரா என்ற பெண் குழந்தை பிறந்தது.

விடாமுயற்சியை கொண்டாடும் ரசிகர்கள் – 6 நாட்களில் ரூ.113.25 கோடி வசூல் குவித்து சாதனை!
 

55
வீட்டில் எல்லோருமே பெண்கள்; பேத்திகளே அதிகம், பேரன் வேண்டும் என்று ஆசைப்பட்ட சிரஞ்சீவி!

சிரஞ்சீவியின் வீட்டில் அம்மா அஞ்சனாதேவி, மனைவி சுரேகா, மருமகள் உபாசனா, இரண்டு மகள்கள், ஐந்து பேத்திகள் எனப் பெண்களே அதிகம். கிட்டத்தட்ட 10 பெண்கள் இருக்கிறார்கள். பேத்திகள் அதிகம் இருக்கும் நிலையில் ஒரு பேரக் குழந்தையாவது வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வந்திருக்கலாம். அதனால் அவர் அப்படி பேசியிருக்காலம் என்று சிரஞ்சீவிக்கு ஆதரவாக பலரும் குரல் எழுப்ப தொடங்கியிருக்கின்றனர். இருந்தாலும் பெண்கள் பற்றி அவர் இப்படி பேசியிருக்க கூடாது என்று பலரும் விமர்சிக்கும் நிலையில் அது இப்போது சர்ச்சையாகியிருக்கிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories