தமிழ் சினிமாவில் டாப் இசையமைப்பாளராக வலம் வருகிறார் அனிருத். அவர் இசையமைக்கும் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டாகும் நிலையில், அவர் இசையமைத்து கொண்டாடப்படாத தமிழ் பாடல்கள் பற்றி பார்க்கலாம்.
தொட்டதெல்லாம் ஹிட் கொடுக்கும் இசையமைப்பாளர்களில் அனிருத்தும் ஒருவர். அவர் இசையில் கொண்டாடப்படாத பாடல்கள் நிறைய உள்ளன. அந்தப் பாடல்களில் சிலவற்றை தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.
1. எங்கே என்று போவது
அனிருத் இல்லாமல் படம் பண்ண மாட்டோம் என்கிற முனைப்பில் இருக்கும் இயக்குநர்களில் விக்னேஷ் சிவனும் ஒருவர். நானும் ரெளடி தான் படத்தில் தொடங்கிய இவர்கள் கூட்டணி, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி வரை தொடர்ந்து வருகிறது. இவர்கள் காம்போவில் வெளிவந்த ஒரு அண்டர்ரேட்டட் பாடல் தான் ‘எங்கே என்று போவது’ என்கிற பாடல். இப்பாடலை அனிருத் தான் பாடி இருப்பார். இப்பாடல் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இடம்பெற்று இருக்கும்.
2. இதயனே
சிவகார்த்திகேயன் - அனிருத் காம்போவுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இவர்கள் எதிர்நீச்சல் தொடங்கி மதராஸி வரை ஏராளமான படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கின்றனர். இவர்கள் கூட்டணியில் 2018ம் ஆண்டு ரிலீஸ் ஆன வேலைக்காரன் படத்தில் இடம்பெற்ற இதயனே பாடல் ஒரு அண்டர்ரேட்டட் பாடலாகும். இதனை அனிருத்தும் நீத்தி மோகனும் பாடி இருந்தனர்.
3. ஒரே ஒரு
அனிருத் இல்லாமல் படம் இயக்காத இயக்குநர்களில் நெல்சன் திலீப்குமாரும் ஒருவர். இவரின் முதல் படமான கோலமாவு கோகிலாவில், அனிருத் இசையில் வந்த கல்யாண வயசு பாடல் ஹிட் அடித்தாலும் அதில் ஒரே ஒரு என்கிற கொண்டாடப்படாத மெலடி பாடலும் உள்ளது. அப்பாடலை ஜொனிடா காந்தி உடன் பாடி இருந்தார் அனிருத்.
24
Anirudh Underrated Songs
4. கடவுளே விடை
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்தாரா என கேட்கும் அளவுக்கு ஒரு படம் இருக்கிறது. அது தான் ரம். இப்படத்திலும் மனதை வருடும் ஒரு பாடல் இருக்கிறது. கடவுளே விடை என்கிற அப்பாடலை ஷான் ரோல்டன் பாடி இருப்பார். இது அனிருத் வெர்ஷனிலும் உள்ளது. இரண்டுமே வேறலெவலில் இருக்கும்.
5. இரவினில் ஒருவனை
அனிருத் இசையமைத்த அண்டர்ரேட்டட் ஆல்பங்களில் இரண்டாம் உலகமமும் ஒன்று. இப்படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசை என நினைத்திருப்பீர்கள். ஆனால் அனிருத்தும் சில பாடல்கள் இசையமைத்துள்ளார். அதில் ஒன்று தான் இரவினில் ஒருவனை சந்தித்தேன் என்கிற உருக்கமான மெலடி பாடல். இதனை சின்மயி பாடி இருந்தார்.
6. ஐலசா
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்த படம் வணக்கம் சென்னை. இப்படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்து இருந்தார். இதில் ஒசக்க என்கிற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனது. அதன் லேடி வெர்ஷனாக அனிருத் இசையமைத்த பாடல் தான் ஐலசா. இப்பாடலை சுசித்ரா பாடி இருப்பார். அவரின் குரலில் அப்பாடல் வேறலெவல் வைப் ஆக இருக்கும்.
34
கொண்டாடப்படாத அனிருத் பாடல்கள்
7. ஜோடி நிலவே
அனிருத் - தனுஷ் காம்போ என்றாலே எல்லா பாடல்களுமே ஹிட் தான். அதிலும் சில அண்டர்ரேட்டட் பாடல்கள் உள்ளன. அதில் ஒன்று தான் தங்கமகன் படத்தில் இடம்பெற்ற ஜோடி நிலவே என்கிற பாடல். அதனை ஸ்வேதா மோகன் பாடி இருப்பார். கேட்டவே ரொம்ப இனிமையாக இருக்கும்.
8. வேஷங்களில் பொய்யில்லை
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஏராளமான பிட் சாங்ஸ் இருந்திருக்கிறது. அது உடனே ஹிட் அடிக்கும். ஆனால் அனிருத் போட்ட ஒரு பிட் சாங் பலராலும் கொண்டாடப்படவில்லை. அப்பாடல் ரெமோ படத்தில் இடம்பெற்று இருந்தது. கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயனிடம் சண்டைபோட்டு செல்லும் போது வேஷங்களில் பொய்யில்லை என்கிற பாடல் வரும். அப்பாடல் அவ்வளவு அழகாக கம்போஸ் பண்ணி இருப்பார் அனிருத்.
அனிருத் - தனுஷ் கூட்டணியில் மாஸ் ஹிட் அடித்த ஆல்பம் என்றால் அது மாரி. அப்படத்தில் இடம்பெற்ற எல்லா பாடல்களும் ஹிட் அடித்தாலும். பெரிய அளவில் கொண்டாடப்படாத ஒரு பாடலும் உள்ளது. அது தான் ஒரு வித ஆசை என்கிற பாடல். அப்பாடலை வினித் ஸ்ரீனிவாசன் அப்பாடலை பாடி இருந்தார்.
10. ஜூலி
அனிருத் திரைப்படங்களுக்கு இசையமைத்த பாடல்களைப் போல் அவர் இசையமைத்த ஆல்பம் பாடல்களும் கொண்டாடப்படும். அப்படி அவர் இசையமைத்த ஒரு ஆல்பம் பாடல் தான் ஜூலி. இப்பாடலுக்கு பாடல் வரிகளை விக்னேஷ் சிவன் எழுதி இருந்தார். இப்பாடலையும் அனிருத் தான் பாடி இருந்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.