அய்யனார் துணை சீரியலில் நிலாவை பிக் அப் பண்ண வந்த சோழனிடம், அவ என்னோட ஆளு, என் லவ்வர் என கூறி இருக்கிறார் ராகவ். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அய்யனார் துணை சீரியலின் இன்றைய எபிசோடில், புராஜெக்ட் சக்சஸ் ஆனதால், டீமில் உள்ள அனைவரையும் டின்னருக்கு அழைத்து சென்றிருக்கிறார் ராகவ். அங்கு நிலாவை விழுந்து விழுந்து கவனிக்கும் ராகவ்விடம், தான் பாதியிலேயே கிளம்புவதாக சொல்கிறார் நிலா. இதைக்கேட்ட ராகவ், என்ன அதுக்குள்ள கிளம்புறீங்க, இந்த ட்ரீட் உங்களுக்காக தான் என்று சொல்ல, எனக்கு தலை வலிக்குது வீட்ல போய் ரெஸ்ட் எடுத்தா சரியாகிவிடும் என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார் நிலா. நான் கார் அரேஞ்ச் பண்ணட்டுமா என ராகவ் கேட்க, இல்ல என்னை கூட்டிட்டு போக ஆள் வந்துட்டாங்க என சொல்லிவிட்டு கீழே செல்கிறார் நிலா.
24
சோழனை கடுப்பேற்றிய ராகவ்
ராகவ், நிலா உடனே வந்து வழியனுப்ப வருகிறார். பின்னர் நிலா காருக்குள் சென்று அமர்ந்த உடன், சோழனை அழைத்து பேசும் ராகவ், பாத்து பத்திரமா அழைச்சிட்டு போ அவ என்னோட ஆளு புரியுதா, அதாவது நான் காதலிக்குற பொண்ணுனு சொல்றேன் என கூறுகிறார். இதைக்கேட்ட சோழன் கடுப்பாகிறார். ராகவ்வின் பேச்சுக்கு பதிலடி கொடுக்காத சோழன், கோபத்துடன் காரில் ஏறி உட்கார்ந்து நிலாவை அழைத்து செல்கிறார். வீட்டுக்கு செல்லும் வழியில் எதுவுமே பேசாமல் கோபத்துடனே கார் ஓட்டிக் கொண்டு செல்கிறார் சோழன். எப்பையும் எதாச்சும் பேசிக்கிட்டே வருவ, இன்னைக்கு என்ன அமைதியா வர்ற என நிலா கேட்கிறார். அதற்கும் மெளனமாக இருக்கிறார் சோழன்.
34
பல்லவன் கேட்ட கேள்வி
நிலாவுக்காக சோழன் கிஃப்ட் ஒன்றையும் வாங்கி வைத்திருக்கிறார். ஆனால் அவர் அதை நிலாவிடம் கொடுக்கும் முன்னரே, நிலாவே அதை எடுத்துப் பார்த்துவிடுகிறார். அப்போது அதை உங்களுக்காக தான் வாங்குனேன். இது ரொம்ப ரேட்டு கம்மி, இதெல்லாம் உங்களுக்கு பிடிக்காது அதான் உங்ககிட்ட கொடுக்கல என சொல்கிறார் சோழன். ரேட்டுல என்னங்க இருக்குனு சொல்லி, நிலா அந்த கிஃப்டை பிரித்து பார்க்கிறார். வீட்டுக்கு வந்த உடனே பல்லவன், நிலாவிடம் பேசுகிறார். என்ன அண்ணி, நீங்க அண்ணன் செஞ்ச உதவிக்காக, அண்ணனை கட்டிப்பிடிச்சு ஐ லவ் யூ லாம் சொன்னீங்கலாமே என கேட்கிறார்.
அதெல்லாம் இல்லை என மறுக்கும் நிலா, என்ன நடந்தது என்கிற உண்மையெல்லாம் சொல்கிறார். உங்க அண்ணன் எனக்கு ஹெல்ப் பண்ணுனது உண்மை தான், அதற்காக கட்டிப்பிடிச்சு நன்றி சொன்னேன். ஆனால் நான் ஐ லவ் யூனு சொல்லவே இல்லை என கூறுகிறார். அது உங்க அண்ணன் ரீல் விட்ருப்பான் என நிலா சொன்னதும் எல்லோரும் சிரிக்கிறார். ஏற்கனவே ராகவ்வின் பேச்சால் செம கோபத்தில் இருக்கும் சோழன், தற்போது அனைவரும் கிண்டல் செய்து சிரிப்பதால் மேலும் டென்ஷன் ஆகிறார். ஆமா நான் என்னோட சந்தோஷத்துக்காக பொய் சொன்னேன் என கத்திவிட்டு வீட்டை விட்டு சென்றுவிடுகிறார் சோழன். இதைப்பார்த்த நிலாவுக்கு சோழன் மீது பரிதாபம் ஏற்படுகிறது. அவர் சோழனிடம் பேச செல்கிறார். இதையடுத்து என்ன ஆச்சு என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.