இன்ஸ்டா பதிவால் வந்த வினை... பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனாவுக்கு அபராதம் விதித்த வனத்துறை

Published : Jan 29, 2026, 10:53 AM IST

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக மகுடம் சூடிய அர்ச்சனா ரவிச்சந்திரன் இன்ஸ்டாகிராமில் போட்ட ஒரு பதிவால் அவருக்கு வனத்துறை அபராதம் விதித்துள்ளது.

PREV
14
Bigg Boss Archana in Trouble

சின்னத்திரை உலகில் வேகமாக கவனம் பெற்ற நடிகைகளில் அர்ச்சனா ரவிச்சந்திரனும் ஒருவர். சென்னையில் பிறந்து வளர்ந்த அர்ச்சனா, ஆரம்ப காலகட்டத்தில் மீடியா துறையின் மீது கொண்ட ஆர்வத்தால், வீடியோ ஜாக்கியாக தனது பயணத்தை தொடங்கி உள்ளார். மேடை பயம் இல்லாத பேச்சுத் திறன் அவரை சின்னத்திரை பக்கம் கொண்டு சென்றது. அதன் தொடர்ச்சியாக அவர் சின்னத்திரை சீரியல்களில் நடித்தார். குறிப்பாக ராஜா ராணி 2 சீரியல் மூலம் அவருக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது.

24
பிக் பாஸ் பிரபலம் அர்ச்சனா

அர்ச்சனாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது ரியாலிட்டி ஷோக்கள் தான். அதிலும் குறிப்பாக 2023-ம் ஆண்டு தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் கலந்துகொண்டு வெற்றிபெற்றார் அர்ச்சனா. அதன்பின்னர் அவருக்கு சினிமா வாய்ப்புகளும் குவியத் தொடங்கின. ஹாரர் ஜானரில் வெளியான டிமாண்டி காலனி 2 திரைப்படம் அவரது நடிப்புக்கு விமர்சன ரீதியில் நல்ல பெயரை பெற்றுத் தந்தது. அர்ச்சனாவுக்கு சீரியல் நடிகர் அருண் பிரசாத் உடன் அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

34
வைரலான இன்ஸ்டா பதிவு

இன்ஸ்டாகிராமில் அர்ச்சனாவுக்கு 14 லட்சம் பாலோவர்கள் உள்ளனர். அவர்களுக்காக ரீல்ஸ் போடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அர்ச்சனா. சமீபத்தில் அர்சசனா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த வீடியோ தான் தற்போது அவருக்கு சிக்கலாக மாறி உள்ளது. திருவண்ணாமலையில் பிரச்சித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பின் புறம் உள்ள அண்ணாமலையார் மலை ஆன்மிக ரீதியாக மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த மலை 2668 அடி உயரம் உள்ளது. இந்த மலைப்பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மலையில் ஏற பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

44
அபராதம் விதித்த வனத்துறை

இந்த நிலையில், நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன், ஓரிரு தினங்களுக்கு முன்பு வனத்துறையிடம் அனுமதி பெறாமல், தடையை மீறி மலை உச்சி வரை சென்று வந்திருக்கிறார். அவர் மலை ஏறியது குறித்து வீடியோ ஒன்றையும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மலைமீது ஏறி இறங்கியது மிகவும் கடினமாக இருந்ததாகவும், இருள் சூழ்ந்துவிட்டதால் தான் அச்சமடைந்ததாகவும், டிரெக்கிங் செல்வதாக இருந்தால் காலையிலேயே ஏறி, மாலைக்குள் இறங்க திட்டமிட்டுக்கொள்ளுங்கள் என்றும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.

அர்ச்சனாவின் இந்த பதிவு வைரலான நிலையில், அதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி, அனுமதியின்றி மலையேறிய குற்றத்திற்காக அர்ச்சனாவுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து இருக்கிறது.

Read more Photos on
click me!

Recommended Stories