எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் மீது போடப்பட்டிருந்த குண்டாஸ் கேன்சல் செய்யப்பட்டதால் அவர் ஜாமினில் வெளியே வந்துள்ளார். இதன் பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி, அமுதாவை கொலை செய்ததாகவும், தமிழ் சோறு ஃபுட் டிரக்கில் போதைப் பொருள் விற்பனை செய்வதாகவும் பொய் புகார் கூறி நடவடிக்கை எடுத்துள்ள போலீஸ், ஜனனியை அரெஸ் பண்ணி கூட்டிச் சென்ற நிலையில், அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடினார் ஜனனி. இதையடுத்து அவரை வலைவீசி தேடி வந்த நிலையில், பினாமி குமாரின் ஆட்களிடம் சிக்கிக் கொள்கிறார் ஜனனி. பின்னர் அவர்கள் ஜனனியை கடத்திச் சென்று ஒரு இடத்தில் அடைத்து வைத்துவிடுகிறார்கள். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
வீட்டை விட்டு கிளம்பும் பெண்கள்
ஆதி குணசேகரன் வீட்டில் மறைத்து வைத்திருக்கும் வீடியோ ஆதாரத்தை கதிர், ஞானம் ஆகியோர் வலைவீசி தேடி வந்த நிலையில், அந்த வீடியோ தங்களிடம் இருப்பதாக சொல்லி அவர்களை குழப்பி விடுகிறார் ரேணுகா. அதுமட்டுமின்றி அவர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபடுகிறார். அப்போது எண்ட்ரி கொடுக்கும் விசாலாட்சி, இந்த சல்லிப் பயலுகளோட சரிசமமா பேசுறதை விட்டுட்டு ஜனனியை நல்லபடியா வீட்டுக்கு கூட்டிட்டு வர்ற வழியப்பாருங்க என சொல்ல, அவரின் பேச்சைக் கேட்டு, ஜனனியை தேடி நந்தினி, ரேணுகா ஆகியோர் கிளம்பிச் செல்கிறார்கள். இதைக்கேட்டு கதிர் அதிர்ச்சி அடைகிறார்.
34
விசாலாட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த குணசேகரன்
மறுபுறம் ஆதி குணசேகரன் மீதான குண்டாஸ் கேன்சல் ஆனதைத் தொடர்ந்து அவர் ஜாமினின் வெளியே வருகிறார். ஜாமின் கிடைத்ததும் நேராக வீட்டுக்கு வரும் ஆதி குணசேகரனை கதிர், ஞானம், அறிவுக்கரசி ஆகியோர் வரவேற்கிறார்கள். அண்ணன் வரட்டும் அண்ணன் வரட்டும்னு பூச்சாண்டி காட்டுறீங்க வந்தா என்னடா பண்ணிருவான் உங்க அண்ணன் என விசாலாட்சி கேட்டபோது தான் வீட்டுக்குள் மாஸ் எண்ட்ரி கொடுத்திருக்கிறார் குணசேகரன். உள்ளே வந்ததும் நல்லா இருக்கியா அம்மா என கேட்கிறார் ஆதி குணசேகரன். அவரின் எண்ட்ரியால் விசாலாட்சி கதிகலங்கிப் போய் இருக்கிறார்.
ஆதி குணசேகரன் வீட்டுக்குள் எண்ட்ரி ஆனதும் அவரின் உத்தரவுக்காக காத்திருக்கிறார் பினாமி குமார். நான் சொன்னதும் ஜனனியை முடிச்சு விட்ருங்க என ரெளடிகளிடம் சொல்கிறார். இதையெல்லாம் ஜனனி ஒட்டுக் கேட்டுவிடுகிறார். பின்னர் அங்கிருந்து எப்படியாவது தப்பிச் செல்ல வேண்டும் என முடிவெடுக்கிறார். மறுபுறம் ஜனனியை தேடி சக்தி, நந்தினி, ரேணுகா ஆகியோர் அலைகிறார்கள். அவர்கள் ஜனனியை காப்பாற்றினார்களா? பினாமி குமார் ஜனனியை கொன்றுவிட்டாரா? ஆதி குணசேகரனின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.