Pandian Stores 2: "நான் உன் அம்மா இல்ல" - செந்திலுக்கு மீனா கொடுத்த தரமான செய்கை! கோமதியை பாடாய் படுத்தும் பாண்டியன்.! பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்.!

Published : Jan 29, 2026, 09:41 AM IST

Pandian Stores 2: பாண்டியன் குடும்பம் ஒன்று சேர்ந்ததை அறிந்து பாக்கியம், தங்க மயிலை தூண்டிவிடுகிறார். பாண்டியனிடம் சமாதானம் பேச முயற்சிக்கும் கோமதியின் முயற்சிகள் தோல்வியடைய அவர் மனமுடைகிறார். மீனாவிடம் உதவி கேட்கும் மயிலுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

PREV
16
திருந்தவே திருந்தாத பாக்கியம்

Pandian Stores 2 S2 E702,பாண்டியன் ஸ்டோர் சீரியலில், இன்றைய எபிசோட், பாக்கியம் வீட்டில் இருந்து தொடங்குகிறது. பாண்டியன் மற்றும் முத்துவேல் குடும்பம் சேர்ந்து விட்டதாகவும் விருந்து நடந்ததாகவும் பாக்கியத்தின் மகள் தெரிவித்தது. அவருக்கு பெரும் அதிர்ச்சியைக்கொடுத்தது. 

26
போட்டோவை பார்த்து அதிர்ந்த தங்க மயில்

இது தொடர்பான புகைப்படத்தை பாக்கியம், மயிலிடம் காண்பிக்கிறார். மேலும், உன்னை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டு, இரண்டு குடும்பமும் விருந்து விழா என்று கூத்தடிப்பதாக பாக்கியம் தெரிவிக்கிறார்.

36
கடவுளிடம் முறையிட்ட கோமதி

மறுபுறம், கோமதி தனது வீட்டில் சாமி கும்பிடுகிறார். தன்னை பாண்டியனுடன் சேர்த்து வைக்க வேண்டும், சண்டை முடிவுக்கு வரவேண்டும் என கடவுளிடம் கோரிக்கை வைக்கிறார். அப்போது அவருக்கு சரவணன் மற்றும் கதிர் ஆறுதல் கூறுகின்றனர். வாக்கிங் சென்று வந்து பிறகு அப்பா உன்னிடம் பேசுவார் எனவும் கோமதியிடம் தெரிவித்தனர். பாண்டியன் வீட்டுக்கு வந்ததும் காபி கொடுத்து பாண்டியனை சமாதானப்படுத்த முயற்சிக்கிறார். ஆனால் பாண்டியன் இறங்கி வரவே இல்லை. இதனால் கோமதி மனதளவில் சிரமத்திற்கு உள்ளாகிறார். காபிக்கு பேசாதவர் கண்டிப்பா வெண்டைக்காய் சாம்பாருக்கு பேசுவார் எனவும் எனவே மதியானம் வெண்டைக்காய் சாம்பார் செய்யலாம் எனவும் கதிர் தனது அம்மாவுக்கு ஐடியா கொடுக்கிறார்.

46
உங்க வேலைய நீங்களே பாருங்க - மீனா போட்ட கண்டிஷன்

இது இப்படி இருக்க, மீனா வெளியே கிளம்ப ஆயத்தம் ஆகிறார். லேட்டாக எழுந்திருக்கும் மீனாவின் கணவர் ஏன் எழுப்பவில்லை என கோவிக்கிறார். காபி வேண்டும் என கேட்டதற்கு, பேசமாட்டேன் என கூறிய பிறகு எதற்கு நான் காபி, டிபன் செய்துதரவேண்டும் எனவும் அவங்க அவங்க வேலைய அவங்க அவங்களே செய்துகொள்ள வேண்டும் எனவும் மீனா கூறுகிறார். நான் ஒன்றும் உங்க அம்மா கிடையாது நீங்களே உங்களுக்கு சமைத்துக்கொள்ளுங்கள் என கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார் மீனா.

56
தவியாய் தவிக்கும் தங்க மயில்

இந்த நிலையில் மீனாவை வந்து சந்திக்கிறார் தங்க மயில். மீனாவை சந்திக்கும் தங்க மயில், என்னை வீட்டை விட்டு அனுப்பி விட்டு நீங்க எல்லோரும் சந்தோஷமாக இருக்குறீங்க இல்ல என கேள்வி எழுப்புகிறார். தப்பு மேல தப்பு பண்ணியது உண்மைதான் என ஒத்துக்கொண்ட தங்க மயில், நீதான் எனக்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கிறார். ஆனால் வேலை இருப்பதாக சொல்லி விட்டு அலுவலகம் உள்ளே செல்கிறார் மீனா.

66
கண்ணீருடன் சென்ற கோமதி

அடுத்ததாக, பாண்டியனும், சரவணனும் கடையில் இருக்க, கோமதி சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்தார். பின்னர் நான் வேண்டுமானால் கடையில் வேலை பார்க்கட்டுமா என கேட்டதால் பாண்டியன் ஆத்திரம் அடைகிறார். இதனால் சமாதானம் செய்ய வந்த கோமதி கவலையுடன் வீட்டுக்கு செல்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய எபிசோட். 

Read more Photos on
click me!

Recommended Stories