சிறகடிக்க ஆசை சீரியலில் நாயகனாக நடித்து வரும் வெற்றி வசந்த், தன்னுடைய மனைவி வைஷ்ணவி உடன் சேர்ந்து இன்ஸ்டா நேரலையில் குட் நியூஸ் ஒன்றை சொல்லி உள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம்.
விஜய் டிவியில் சக்கைப்போடு போட்டு வரும் சீரியல்களில் சிறகடிக்க ஆசை சீரியலும் ஒன்று. இந்த சீரியல் கடந்த 2023-ம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு மேல் வெற்றிநடைபோட்டு வரும் இந்த சீரியலில் நாயகனாக வெற்றி வசந்த் நடிக்கிறார். அவர் நடிக்கும் முத்து கதாபாத்திரம் ரசிகர்களின் பேவரைட்டாக மாறி உள்ளது. அதேபோல் அவரின் மனைவியாக நடிக்கும் மீனாவின் கேரக்டரும் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். இவர்கள் மட்டுமின்றி விஜயா, மனோஜ், ரோகிணி, ஸ்ருதி, ரவி, அண்ணாமலை என ஏராளமான கதாபாத்திரங்கள் இந்த சீரியலில் உண்டு.
24
சக்கைப்போடு போடும் சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலின் சிறப்பம்சம் என்னவென்றால், அதில் ஏகப்பட்ட கேரக்டர்கள் இருந்தாலும் அவை அனைத்திற்குமே முக்கியத்துவம் கொடுத்து மனதில் பதியவைத்துவிடுவார்கள். இந்த சீரியலில் ரோகிணி பற்றிய உண்மைகள் அனைத்தும் அண்மையில் தான் வெளிச்சத்துக்கு வந்தன. ரோகிணியை பற்றிய எல்லா உண்மைகளையும் கண்டுபிடித்து முத்து தான் போட்டுடைத்தார். இதனால் சீரியல் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் அந்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங்கும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
34
வெற்றி வசந்தின் காதல் திருமணம்
சிறகடிக்க ஆசை சீரியல் நாயகன் வெற்றி வசந்துக்கு கடந்த 2024-ம் ஆண்டு திருமணம் ஆனது. அவர் சீரியல் நடிகை வைஷ்ணவி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். வெற்றி வசந்தின் மனைவி வைஷ்ணவி விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்னி என்கிற சீரியலில் நாயகியாக நடித்திருந்தார். அந்த சீரியல் கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. பொன்னி சீரியல் முடிவடைந்த பின்னர் சின்னத்திரை பக்கம் தலைகாட்டாமல் இருந்து வருகிறார் வைஷ்ணவி. இந்நிலையில், அவர் தன்னுடைய கணவருடன் சேர்ந்து குட் நியூஸ் ஒன்றை சொல்லி உள்ளார்.
அது என்னவென்றால், வைஷ்ணவி தற்போது தனது கணவர் வெற்றி வசந்த் உடன் இணைந்து பொட்டிக் ஒன்றை திறந்திருக்கிறார். இந்த பொட்டிக்கில் பெண்களுக்கான ஆடைகள் மட்டும் முதற்கட்டமாக விற்பனை செய்ய இருக்கிறார்களாம். அதுமட்டுமின்றி இந்த பொட்டிக்கில் தற்போது ஆன்லைன் விற்பனை மட்டுமே செய்து வருகிறார்கள். அதன்பின்னர் அந்த தொழில் வளர்ச்சி அடைந்த பின்னர் கடை திறக்க வாய்ப்பு உள்ளது. இதனைத் தான் தங்களுடைய குட்டி ஃபேமிலி இப்போ பெருசாகிறது என கூறி இருக்கிறார் வைஷ்ணவி. புது பிசினஸ் தொடங்கி உள்ள இந்த ஜோடிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.