எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் போலீஸிடம் இருந்து எஸ்கேப் ஆன ஜனனியை ஒரு கும்பல் கடத்திச் சென்றிருக்கிறது. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் கதைக்களம் தலைகீழாக மாறி இருக்கிறது. இதுவரை ஆதி குணசேகரனும் அவரது தம்பிகளும் ஓடி ஒளிந்துகொண்டிருந்த நிலையில், தற்போது அமுதா கொலை வழக்கில் ஜனனி, போலீஸிடம் இருந்து தப்பி தலைமறைவாகி இருக்கிறார். ஜனனியை காப்பாற்ற கலெக்டர் மதிவதினியின் உதவியை நந்தினி, ரேணுகா, சக்தி ஆகியோர் நாடி உள்ள நிலையில், போலீஸார் கலெக்டர் வீட்டுக்கே வந்து அதிரடி சோதனை நடத்தி இருக்கிறார்கள். மதிவதினியும் விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாக கூறி இருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
கடத்தப்படும் ஜனனி
மதுரையில் மிகப்பெரிய ரெளடியாக இருக்கும் பினாமி குமாரின் வீட்டில் தான் தலைமறைவாக இருக்கிறார் ஆதி குணசேகரன். பினாமி குமார் பற்றி குணசேகரன் ஏற்கனவே பில்டப் கொடுத்திருந்தாலும் அதற்கு ஏற்றார் போல் அவர் எந்த சம்பவமும் செய்யாமல் இருந்து வந்தார். இதனால் அவர் ஒரு டம்மி பீஸ் என ஆடியன்ஸ் கருதி வந்தனர். அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஒரு தரமான சம்பவத்தை செய்திருக்கிறார் பினாமி குமார். போலீசிடம் இருந்து தப்பியோடிய ஜனனியை, பினாமி குமார் ஆள் வைத்து தூக்கி இருக்கிறார். ஜனனியை கடத்திச் சென்று ஒரு இடத்தில் அடைத்து வைத்திருக்கிறார்.
34
பினாமி குமார் போட்ட உத்தரவு
ஜனனியை கடத்திய தன்னுடைய ஆட்களிடம், போன் போட்டு பேசும் குமார், ஆதி குணசேகரன் அண்ணனின் குண்டாஸ் நாளைக்கு ரத்தாகிவிடும். அவர் வீட்டிற்கு சென்று காலடி எடுத்து வைத்ததும் ஜனனியை முடிச்சுவிட்றுங்க என உத்தரவிடுகிறார். ஜனனி வாய், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருக்கிறார். மறுபுறம் வீட்டில் அராஜகம் செய்து வரும் கதிர் கேங், போலீஸிடம் இருந்து தப்பிச்சு ஓடுனால்ல அந்த மெட்ராஸ் காரி, ஒரே நாள்ல மாட்டுவா, அவளை வச்சே உங்களை ஒட்டுமொத்தமா காலி பண்ணப் போறேன் என ரேணுகா மற்றும் நந்தினியிடம் வாய்ச்சவடால் விடுகிறார்.
ஆதி குணசேகரன் வெளியே வரும் முன் அவர் சம்பந்தப்பட்ட முக்கிய ஆதாரம் வீட்டில் இருப்பதாகவும் அதை எப்படியாவது தேடி எடுக்கும்படியும் கதிரிடம் வக்கீல் கூறி இருந்தார். அதை வீட்டில் உள்ள பெண்களுக்கு தெரியாமல் தேடி கண்டுபிடிக்க கதிர் திட்டம் போட்டிருந்த நிலையில், நீங்க தேடுற வீடியோ ஆதாரம் இப்போ எங்ககிட்ட தான் இருக்கு என ரேணுகா சொன்னதும் வெடவெடத்துப் போன கதிர், எங்க காட்டுங்க என கேட்க, எதுக்கு நீ புடுங்கிட்டு ஓடவா, அதெல்லாம் முடியாது என சொல்லிவிடுகிறார். இதையடுத்து என்ன ஆனது? ரேணுகா வைத்திருக்கும் வீடியோ ஆதாரம் என்ன? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.