புருடா விட்ட சோழன்... நிலாவுக்கு நூல்விடும் ராகவ் - அய்யனார் துணை சீரியல் இன்றைய எபிசோடு

Published : Jan 28, 2026, 12:16 PM IST

அய்யனார் துணை சீரியலில் நிலாவின் லேப்டாப்பை கண்டுபிடித்து கொடுத்த சோழனை அவர் கட்டிப்பிடித்து நன்றி சொல்லி இருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

PREV
14
Ayyanar Thunai Serial Today Episode

அய்யனார் துணை சீரியலில் நிலா தன்னுடைய ஆபிஸ் வேலைக்காக தயார் செய்து வைத்திருந்த புராஜெக்ட் அடங்கிய லேப்டாப் ஆட்டோவில் தொலைந்து போகிறது. இதையடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த நிலா, சோழனுக்கு போன் போட்டு விஷயத்தை சொன்னதை அடுத்து ஸ்மார்ட் ஆக யோசித்த சோழன், அந்த ஆட்டோ டிரைவரை கண்டுபிடித்து, அவரிடம் இருந்து லேப்டாப்பை எடுத்து வந்து சரியான நேரத்தில் நிலாவிடம் ஒப்படைக்கிறார். இதையடுத்து நிலா சந்தோஷத்தில் சோழனை கட்டிப்பிடித்து நன்றி சொல்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

24
பில் டப் பண்ணும் சோழன்

நிலா கட்டிப்பிடித்ததை தன் அண்ணனிடமும், தம்பிகளிடம் சொல்ல வேண்டும் என ஆசைப்பட்ட சோழன், அவர்களை போன் போட்டு வீட்டு வரச் சொல்கிறார். பின்னர் நிலா லேப்டாப் காணாமல் போன விஷயத்தை சொல்ல, அதைக்கேட்ட அனைவரும் ஷாக் ஆகிறார்கள். இதுகே ஷாக் ஆனா எப்படி, இனிமே தான் மெயின் பிக்சரே இருக்கு என கூறி, நிலா தன்னை கட்டிபிடித்த விஷயத்தை சொல்கிறார். இதைக்கேட்ட சேரன் நிஜமாவாடா சொல்ற என கேட்க, சத்தியமா அண்ணேன் என சொல்லி, அதன் பின்னர் தன்னுடைய கட்டுக் கதைகளையெல்லாம் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார் சோழன்.

34
சந்தேகப்படும் தம்பிகள்

நிலா தன்னை கட்டிப்பிடித்து ஐ லவ் யூ சோழன் என சொன்னதாக அவர் சொன்னதைக் கேட்ட பல்லவன், இவன் சொல்றதெல்லாம் நம்புற மாதிரி இல்லையே என கூறுகிறார். அதன்பிறகு என்னைவிட்டு போக நிலாவுக்கு மனசே இல்ல, என்னை மாதிரி ஒரு ஆள் அவளுக்கு புருஷனா கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்னு சொன்னதாக புருடா விடுகிறார் சோழன். சேரன் இதையெல்லாம் நம்பினாலும் பாண்டியன் மற்றும் பல்லவன் சந்தேகப்படுகிறார்கள். உண்மையில் நிலா, சோழனை கட்டிப்பிடித்து நன்றி தெரிவித்த பின்னர் அவருக்கு தான் ட்ரீட் வைப்பதாக மட்டுமே கூறி இருந்தார்.

44
நிலாவை விழுந்து விழுந்து கவனிக்கும் ராகவ்

மறுபுறம் ஆபிஸில் நிலாவை திட்டியதால் அவரிடம் மன்னிப்பு கேட்ட ராகவ், இன்று இரவு டின்னருக்கு எல்லாரும் ஹோட்டல் போகலாம் என அழைத்துச் செல்கிறார். அங்கு சாப்பிடும் போது, மற்ற ஊழியர்களை விட்டுவிட்டு நிலாவை மட்டும் விழுந்து விழுந்து கவனிக்கிறார் ராகவ். இதை நோட் பண்ணிய நிலாவின் தோழி திவ்யா, அவரு உனக்கு ரூட் விடுறாரு என்று சொல்ல, சும்மா இரு டி என கூறுகிறார் நிலா. இதையடுத்து சோழனுக்கு போன் போடும் நிலா, தன்னை வந்து ஹோட்டலில் பிக் அப் பண்ண வரச் சொல்கிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்ப்போம்.

Read more Photos on
click me!

Recommended Stories