சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் பூக்கடை திறப்பு விழாவுக்கு திடீரென எண்ட்ரி கொடுத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார் ரோகிணி. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவுக்கு மிகப்பெரிய பூ ஆர்டர் கிடைத்திருக்கிறது. இதற்காக அபார்ட்மெண்ட் வாயிலில் பூக்கடை ஒன்றை திறக்க முடிவு செய்துள்ளார் மீனா. இதற்காக கடை திறப்பு விழாவுக்கு அனைவரையும் அழைத்திருக்கிறார். குறிப்பாக ஸ்ருதியை இந்த கடை திறப்பு விழாவுக்கு வர வைத்து, அவரை ரவி உடன் மீண்டும் சேர்த்து வைக்க பிளான் போட்டிருக்கிறார் மீனா. மறுபுறம் ரோகிணியும் பில்டரிடம் பேசி மனோஜ் கைநழுவி போன காண்ட்ராக்டை மீண்டும் வாங்க முனைப்பு காட்டி வருகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
25
பார்வதி வீட்டில் விஜயா
பார்வதி, சிவன் உடன் வீட்டில் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்க, அப்போது சிந்தாமணியும், விஜயாவும் அங்கு வந்து அதை பார்த்துவிடுகிறார்கள். அவர்கள் டான்ஸ் ஆடியதை பார்த்து கடுப்பான விஜயா, என்ன இப்படி கூத்தடிச்சிட்டு இருக்கீங்க என திட்ட, நாங்க சந்தோஷமா இருக்குறது உனக்கு பிடிக்கலையா என பதிலடி கொடுக்கிறார் பார்வதி. நீத்துவால் ஸ்ருதி - ரவி இடையே சண்டை ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டதை சொல்கிறார் விஜயா. இதைக்கேட்ட சிந்தாமணி என்ன மாஸ்டர் உங்க வீட்டு பிரச்சனைக்காக ஒரு தனி கோர்ட்டே நடத்தலாம் போல என சொல்லி கிண்டல் பண்ணுகிறார்.
35
சிந்தாமணி கொடுக்கும் ஐடியா
இதையடுத்து விஜயாவிடம், இதெல்லாம் கண் திருஷ்டி தான். அதை சரி பண்ண வீட்டில் பூஜை செய்தால் சரியாகிவிடும் என சிந்தாமணி சொல்ல, சரி உங்களுக்கு யாராவது சாமியார் தெரிந்தால் சொல்லுங்க என விஜயா கேட்கிறார். நான் பேசிட்டு சொல்றேன் மாஸ்டர் என்று சிந்தாமணியும் கூறுகிறார். அதேபோல் மீனாவின் பூக்கடை பற்றி பார்வதி கேட்கையில், நீங்க ஏன் சிந்தாமணி இந்த ஆர்டரை எடுக்காம விட்டீங்க என விஜயா கேட்கிறார். அதற்கு அவர், எல்லாம் என்னோட பொண்ணால தான் மாஸ்டர். விடுங்க பார்த்துக்கலாம் என சொல்கிறார் சிந்தாமணி.
இதன்பின்னர் மீனாவின் பூக்கடை திறப்பு விழாவுக்கு உறவினர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்குகிறார்கள். அங்கு வந்திருக்கும் ரவி, ஸ்ருதி எப்படியாச்சும் இங்க வருவா, அவகிட்ட பேசி சமாதானப்படுத்திவிடலாம் என காத்திருக்கிறார். ஆனால் ஸ்ருதி, மீனாவுக்கு வீடியோ கால் போட்டு, தன்னால் கடைதிறப்பு விழாவுக்கு வர முடியாது என சொல்லிவிடுகிறார். என்ன ஆச்சு என மீனா கேட்க, தன்னுடைய ரெஸ்டாரண்டுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய வர உள்ளதால், நான் இங்கு இருக்க வேண்டும், அதனால் வர முடியவில்லை என கூறுகிறார் ஸ்ருதி.
55
புது குண்டை தூக்கிப்போட்ட ரோகிணி
இதையடுத்து ஒரு கார் வேகமாக வந்து மீனாவின் பூக்கடை முன் நிற்கிறது. அதிலிருந்து மாஸ் ஆக இறங்கி வருகிறார் ரோகிணி. அவரைப் பார்த்து அனைவரும் ஷாக் ஆகிறார்கள். நீ எதுக்கு இங்க வந்த, மீனா கூப்டாலா என விஜயா கேட்க, அவங்க கூப்பிடல, நானா தான் வந்தேன் என சொல்கிறார் ரோகிணி. மீனாவுக்கு பூ ஆர்டர் கொடுத்த மேனேஜர் தான் தன்னை வரச் சொன்னதாக கூறுகிறார் ரோகிணி. அந்த மேனேஜரிடம் பேசி, ஹோம் அப்ளையன்ஸ் கொடுக்கும் ஆர்டரை மீண்டும் வாங்கி இருக்கிறார் ரோகிணி. இதனால் ஒரு பிசினஸ் பார்ட்னராக மனோஜ் உடன் சேர்ந்து வேலை செய்ய இருப்பதாக ரோகிணி சொன்னதைக் கேட்டு அனைவரும் ஷாக் ஆகிறார்கள். இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.