Siragadikka Aasai Meena: சிறகடிக்க ஆசை ரசிகர்களுக்கு ஒரு ஸ்வீட் நியூஸ்.! மீனாவுக்குக் கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு!

Published : Jan 29, 2026, 10:22 AM IST

விஜய் டிவியின் 'சிறகடிக்க ஆசை' சீரியல் மூலம் பிரபலமான நடிகை கோமதி பிரியா, தற்போது மலையாள சின்னத்திரையில் அறிமுகமாகிறார். 'மகாநதி' சீரியலின் மலையாள ரீமேக்கான 'ஈ புழயும் கடந்து' என்ற தொடரில் அவர் கதாநாயகியாக நடிக்கிறார். 

PREV
14
கேரளாவில் கால்பதிக்கும் மீனா

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான 'சிறகடிக்க ஆசை' மூலம் இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரின் மனதையும் கவர்ந்தவர் நடிகை கோமதி பிரியா. இந்தத் தொடரில் 'மீனா' என்ற கதாபாத்திரத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வரும் இவருக்கு, தற்போது அண்டை மாநிலமான கேரளாவிலும் ஒரு முக்கிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

24
மகாநதியின் மறுபதிப்பில் கோமதி பிரியா

மலையாள சின்னத்திரையில் 'ஈ புழயும் கடந்து' (Ee Puzhayum Kadannu) என்ற புதிய தொடர் தொடங்கப்பட உள்ளது. இது தமிழில் புகழ்பெற்ற 'மகாநதி' சீரியலின் மலையாள மறுபதிப்பாகும். தமிழில் நடிகை லட்சுமி பிரியா (காவேரி) நடித்த அதே முதன்மை கதாபாத்திரத்தில், மலையாளத்தில் கோமதி பிரியா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

34
சீரியல் குறித்த விவரங்கள்

இந்த புதிய தொடருக்கான ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 'ஈ புழயும் கடந்து' சீரியல் வரும் பிப்ரவரி 2-ம் தேதி முதல், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

மதுரையில் இருந்து மலையாளம் வரை: மதுரையைச் சேர்ந்த கோமதி பிரியா, ஆரம்பத்தில் மாடலிங் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்தார். பின்னர் விஜய் டிவியின் 'வேலைக்காரன்' மற்றும் 'ஓவியா' போன்ற தொடர்களில் நடித்திருந்தாலும், 'சிறகடிக்க ஆசை' மீனாவாகத்தான் ரசிகர்களின் பேரன்பைப் பெற்றார். ஏற்கனவே மலையாளத்தில் நடித்த அனுபவம் இவருக்கு இருப்பதால், இந்த புதிய வாய்ப்பு அவரது திரைப் பயணத்தில் அடுத்தகட்டமாகப் பார்க்கப்படுகிறது.

44
வாழ்த்தும் ரசிகர்கள்

தமிழ் சீரியலில் அமைதியான, தியாகம் செய்யும் பெண்ணாக மீனாவை ரசித்து வந்த ரசிகர்கள், இப்போது மலையாள சீரியலில் அவர் எப்படிப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தப் போகிறார் என்பதைப் பார்க்க ஆவலாக உள்ளனர். சமூக வலைதளங்களில் கோமதி பிரியாவிற்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Read more Photos on
click me!

Recommended Stories