மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஆதரவாக அவருடைய மனைவி ஸ்ருதி ரங்கராஜ், நேற்று அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜாய் கிரிசில்டா பதிவு ஒன்றை போட்டிருக்கிறார்.
மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை ஏமாற்றிவிட்டதாக குற்றம்சாட்டி வரும் ஜாய் கிரிசில்டா, அவர் தொடர்பாக தன்னிடம் உள்ள ஆதாரங்களையும் ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார். குறிப்பாக ஜாய் கிரிசில்டா தன்னை மிரட்டி கல்யாணம் செய்துகொண்டதாக மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்ட நிலையில், மிரட்டி கல்யாணம் பண்ணுவதற்கு அவர் என்ன குழந்தையா என கேட்ட ஜாய், அவர் தன்னை காதலிக்கும் போது அனுப்பிய வீடியோவை வெளியிட்டார். அதில் வழிந்து வழிந்து பேசுகிறார் மாதம்பட்டி ரங்கராஜ். இப்படி ஜாய் கிரிசில்டா ஒவ்வொன்றாக வெளியிட்டு வந்த நிலையில், நேற்று மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
24
ஸ்ருதி ரங்கராஜின் அறிக்கை
அதில், “மார்ச் 2025-ல் நான் என் குடும்பப் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டபோது, ஏப்ரல் 2025-லேயே ஜாய் கிரிசில்டாவிடமிருந்து ஒழுக்கமற்ற மற்றும் அவமதிப்பான செய்திகளைப் பெற்றேன். நீதிமன்ற ரீதியாக பிரிந்ததாகக் கூறும் ஒருவர் இப்படிப்பட்ட செய்திகளை அனுப்புவது ஏன்? இதுவே அவருடைய இரட்டை முகத்தனத்தை வெளிக்கொண்டு வருகிறது. அவர் ஊடகங்களைத் தனிப்பட்ட மற்றும் பொருளாதார லாபத்திற்காக தவறாக பயன்படுத்தி, எங்கள் குடும்ப அமைதியைக் குலைக்க முயற்சி செய்வது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது.
ஜாய் தனது சொந்த கையெழுத்தில் எழுதிய கடிதத்தில், எனது கணவர் ரங்கராஜிடம் இருந்து பணம் பறிப்பது மற்றும் எங்களை பிரிப்பது தான் தனது நோக்கம் என்று வெளிப்படையாக கூறியிருப்பது பதிவாக உள்ளது. அவர் ஊடகங்களில் அளித்த பேட்டிகளில் எனக்கு பணம், வீடு எதுவும் வேண்டாம்", "நான் யாரையும் பிரிக்க விரும்பவில்லை" என்று கூறினாலும், அவருடைய சொந்த கையெழுத்தில் உள்ள கடிதமே அதற்கு நேர்மாறாக உண்மையை வெளிப்படுத்துகிறது.
34
ஸ்ருதி வெளியிட்ட ஆதாரம்
அந்தக் கடிதத்தில், என் பொருளாதார தேவைகளை ரங்கராஜ் கவனிக்க வேண்டும். ரங்கராஜ் என்னை தனது மனைவியாக சமூகம் முன் அறிமுகப்படுத்த வேண்டும். ரங்கராஜ் எனக்கு ஒரு வீடு வாங்கிக் கொடுக்க வேண்டும். ரங்கராஜ் எனக்கு மாதம் ரூ.8,00,000 வழங்க வேண்டும். இப்போது எனக்கு ரூ.10,00,000 வேண்டும். ரங்கராஜ் தனது மனைவி ஸ்ருதி பிரியாவுக்கு விவாகரத்து கொடுக்க வேண்டும். என வலியுறுத்தி இருந்தார்.
ஜாய் கிரிசில்டாவின் உண்மையான நோக்கம் - பணம் பறிப்பு மற்றும் சட்டபூர்வமான மனைவியான எனக்கான குடும்ப வாழ்க்கையை நாசம் செய்வது - என்பதை தெளிவாக காட்டுகின்றன. நான் என் கணவர் ரங்கராஜ் அவர்களுடன் உறுதியாக நிற்கின்றேன்; அவரை இறுதி வரை காப்பாற்றுவேன் என்று அந்த அறிக்கையில் ஸ்ருதி குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜாய் கிரிசில்டாவும் தன்னிடம் உள்ள ஆதாரங்களை வெளியிட்டு இருக்கிறார். மாதம்பட்டி ரங்கராஜ் தன்னிடம் மெசேஜில் பேசியதை ஸ்கிரீன்ஷாட் உடன் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், இவரு வருவாராம் கல்யாணம் பண்ணுவாராம் குழந்தை குடுப்பாராம் அப்புறம் ஓடி போவாராம் பெண்கள் வாழ்க்கையை அழிப்பாராம் இதுல இவங்க protect பண்ணுவாகலாம் என்ன கருமம் டா இது என ஸ்ருதியை சூசகமாக சாடி பதிவிட்டுள்ள ஜாய், உருகி உருகி லவ் பண்ணிட்டு பிளாக்மெயில்னு சொன்னா எப்புடி என மாதம்பட்டி ரங்கராஜையும் டேக் செய்து கேள்வி எழுப்பி உள்ளார்.