எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷன் - பார்கவிக்கு பர்ஸ்ட் நைட் ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருக்க, ஆதி குணசேகரன் ஒரு புது ட்விஸ்ட் கொடுத்து இருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷன் - பார்கவிக்கு திருமணம் ஆகி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. ஆனால் இதுவரை அவர்கள் இருவரும் முதலிரவு நடைபெறவே இல்லை. இதற்கு முக்கிய காரணம் ஆதி குணசேகரனின் சதி தான். அவர்களை எப்படியாவது பிரிக்க வேண்டும் என்பதற்காக அன்புக்கரசியை வீட்டில் சேர்த்துக் கொண்டு அவர்கள் இருவருக்கும் இடையே தொடர்ந்து சண்டையை மூட்டிவிட்டு வருகிறார். இந்த தொல்லைகளில் இருந்து விடுபட, தர்ஷன் - பார்கவியை ஹனிமூன் அனுப்பி வைக்க அனைவரும் பிளான் போட்டிருந்தனர். அந்த பிளானும் சொதப்பிவிட்டது. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
ஆதி குணசேகரனுக்கு தெரியவரும் பர்ஸ்ட் நைட் விவகாரம்
ஹனிமூன் பிளானை கேன்சல் பண்ணிவிட்டு தர்ஷன் - பார்கவிக்கு பர்ஸ்ட் நைட் ஏற்பாடுகள் வீட்டில் தடபுடலாக நடைபெறுகிறது. இருவரும் பிரிந்து இருப்பதால் தான் இத்தனை பிரச்சனை வருகிறது. அவர்கள் சேர்ந்துவிட்டால் இனி யாராலும் அவர்களை பிரிக்க முடியாது என்கிற நோக்கத்தில் இந்த ஏற்பாடுகளை ஜனனி, நந்தினி, ரேணுகா ஆகியோர் செய்துள்ளார்கள். இந்த தகவலை ஆதி குணசேகரனுக்கு போன் போட்டு சொல்கிறார் கரிகாலன். அதைக்கேட்ட ஆதி குணசேகரன், அன்புக்கரசி அங்க தான இருக்கா, அவ எல்லாத்தையும் பார்த்துக்குவா என சொல்லி போனை கட் பண்ணி விடுகிறார்.
34
தடபுடலாக நடக்கும் பர்ஸ்ட் நைட் ஏற்பாடுகள்
பர்ஸ்ட் நைட்டுக்காக பார்கவி பட்டுச் சேலை அணிந்து வர அதைப்பார்த்த நந்தினி இந்த சேலையில் ரொம்ப அழகா இருக்க பார்கவி என சொன்னதும், அது ரேணுகா கொடுத்த சேலை என சொல்கிறார் பார்கவி. தர்ஷனும் வேட்டி சட்டையோடு காத்திருக்க, பால் சொம்பை மறந்துவிட்டதாக கூறி, கீழே சென்று பால் சொம்பை எடுக்க செல்கிறார் நந்தினி, அப்போது அங்கு இருக்கும் கரிகாலன், அது என்ன சொம்பு, என கேட்க, அது சுடுதண்ணி என சொல்லிவிட்டு அங்கிருந்து மாடிக்கு விறுவிறுவென ஜூட் விடுகிறார் நந்தினி.
பார்கவி பர்ஸ்ட் நைட்டுக்கு தலை நிறைய பூ வைத்துக் கொண்டு தயாராக இருப்பதை போல், கீழே உள்ள அறையில் அன்புக்கரசியும் பட்டுச் சேலை கட்டிக் கொண்டு தலை நிறைய மல்லிகைப் பூ உடன் பெட்டில் அமர்ந்திருக்கிறார். ஆதி குணசேகரன் சொன்ன பிளான் படி தான் அவர் இந்த கெட் அப்பில் இருக்கிறார் என்பது தெரிகிறது. தர்ஷனையும் பார்கவியை சேர விடக் கூடாது என்பதில் தீர்க்கமாக இருக்கும் அன்புக்கரசி, அவர்களின் பர்ஸ்ட் நைட் நடைபெறாமல் எப்படி தடுக்கப் போகிறார் என்பதை இனி வரும் எபிசோடில் தான் பார்க்க வேண்டும்.