பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற இருக்கும் நிலையில் தனது வீட்டிலிருந்து யாரும் சீர் கொடுக்கவில்லை என்ற வருத்தம் ராஜீக்கு ஏற்பட்டுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தீபாவளி முடிந்து கிட்டத்தட்ட 2 வாரங்கள் கடந்த நிலையில் இப்போது தீபாவளி கொண்டாட்டம் நடைபெற இருக்கிறது. வரும் வாரங்களில் அதற்கான எபிசோடுகள் ஒளிபரப்பு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக தலை தீபாவளி கொண்டாடும் தம்பதிகளுக்கு பெண் வீட்டார் சீர் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மீனா – செந்தில், கதிர் – ராஜீ, பழனிவேல் – சுகன்யா மற்றும் சரவணன் – தங்கமயில் ஆகிய 4 ஜோடிகsள் தங்களது தல தீபாவளியை கொண்டாடுகிறார்கள்.
24
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
இதில் மீனா வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது குடும்பத்தினர் முன் கூட்டியே சீர் கொடுத்துவிட்டனர். இதே போன்று பழனிவேலுவின் மனைவி சுகன்யா குடும்பத்தினரும் வசதியானவர்கள். அவர்களும் சீர் கொடுத்துவிட்டனர். அடுத்ததாக தங்கமயிலின் குடும்பத்தினர் கொஞ்சம் கஷ்டப்படுகிறவர்கள். மகளுக்கு சீர் செய்ய வேண்டி பாண்டியனுக்கு கொடுக்க வேண்டியிருந்த ரூ.10000 பணத்தை பெற்றுக் கொண்டு மகளுக்கும், மாப்பிள்ளைக்கும் தீபாவளி சீர் செய்தார் மாணிக்கம்.
34
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
இப்படி தங்கமயில், மீனா மற்றும் சுகன்யா குடும்பத்தினர் என்று அனைவரும் தீபாவளி சீர் செய்த நிலையில் ராஜீயின் குடும்பத்தினர் மட்டும் சீர் செய்ய வரவில்லை. இதனால் ராஜீ கவலை அடைந்தார். அதனை புரிந்து கொண்ட கோமதி உனக்கும், எனக்கும் ஒரே நிலை தான் என்று அவரை ஆறுதல் படுத்தினார். அப்போது அக்கா என்ற முறையில் உனக்கு நான் சீர் செய்கிறேன் என்று மீனா கூறினார்.
உண்மையில் மீனா தான் அவருக்கு சீர் செய்வாரா அல்லது பாண்டியன் சீர் செய்வாரா? இல்லையென்றால் ராஜீயின் அம்மா வந்து சீர் செய்வாரா என்பதைப் பற்றி இனிவரும் எபிசோடுகளில் நாம் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.