Vikkals Vikram Steps Down from Manager Role : பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் சாண்ட்ரா பிக்பாஸ் தனக்கு கொடுத்த டாஸ்கை தந்திரமாக ஜெயித்து காட்டியதையும், விக்கல்ஸ் அழுதது பற்றியும் பார்ப்போம்.
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில், கடந்த வாரம் அதிரடியாக 4 புதிய வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே வந்துள்ளனர். இவர்கள் 4 பேருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக, ஏற்கனவே உள்ளே இருக்கும் ஹவுஸ் மேட்சுக்கு செம்ம டப் கொடுத்து விளையாடி வருவதை பார்க்க முடிகிறது. இவர்களின் தீவிரமான ஆட்டத்தையும், உள்ளே வந்த கையேடு நான்கு பேரும், வெளியில் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்கிற எண்ணத்தை கூறியதால், தங்களின் விளையாட்டை தற்போது தீவிரப்படுத்தி உள்ளனர்.
25
சுதாரித்து கொண்ட ஹவுஸ் மேட்ஸ்:
குறிப்பாக எதற்கெடுத்தாலும் எகிறி கொண்டு வரும் கம்மு, கொஞ்சம் கம்முனு ஆகி இருக்கிறார். அதே போல் பாருவும் வாட்டடாக போய் சண்டைக்கு இழுக்காமல், அடக்கி வாசித்து வருகிறார். இவர்களை தொடர்ந்து 1 மாதமாக வாயை திறக்காமல் சேப் கேம் விளையாடி வந்த துஷார் இப்போது தான்... பிக்பாஸ் விளையாட்டு என்ன என்பதை புரிந்து கொண்டு தன்னுடைய ஆட்டத்தையே துவங்கி இருக்கிறார். எனவே தற்போது கடைசி இடத்தில் இருக்கு இவரை காப்பாற்றப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
35
பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்:
ஒருவருக்கொருவர் போட்டி போட்டு விளையாடி வருவது ஒருபுறம் இருக்க, பிக்பாஸ் சில சஸ்பென்ஸ் டாஸ்க் மூலம் நிகழ்ச்சியை மேலும் சுவாரஸ்யப்படுத்த சில விஷயங்களை செய்து வருகிறார். நேற்றைய தினம் குக்கிங் டீம் தலைவராக இருக்கும் சாண்ட்ராவை அழைத்து ஒரு சீக்ரெட் டாஸ்க் கொடுத்தார். அதாவது யாரவது ஒருவரை வேலையை விட்டு வெளியேற செய்ய வேண்டும். இல்லை என்றால் ஒருவரை தங்களின் வேலையை ரிசைன் செய்ய வைக்க வேண்டும். அல்லது ஸ்வாப் செய்ய வைக்க வேண்டும் என கூறி இருந்தார்.
45
சாண்ட்ராவுடன் கை கோர்த்த கணவர்:
இதற்காக அவர் தன்னுடைய பாட்னராக கணவரையே தேர்வு செய்த நிலையில், இன்றைய புரோமோவை பார்க்கும் போது சாண்ட்ரா பிக்பாஸ் தனக்கு கொடுத்த வேலையை கட்சிதமாக முடித்து விட்டதை பார்க்க முடிகிறது. அதாவது, இரக்கனவே வெளியான புரோமோவில் சபரி தன்னால் இனி சிலையாக நிற்க முடியாது என கூறி சண்டை போட்டுவிட்டு வெளியேறினார்.
55
கண்ணீர் விட்ட விக்கல்ஸ்:
இவரை தொடர்ந்து, நேற்றைய தினம் திவ்யாவுக்கு பதிலாக புதிய மேனேஜராக பொறுப்பேற்றுக்கொண்ட விக்கல்ஸ் விக்ரம், தன்னால் அனைவரையும் ஒருமித்த கருத்தோடு அழைத்து செல்ல முடியவில்லை. நான் என்னுடைய மேனேஜர் பதிவியை ராஜினாமா செய்கிறேன் என கூறினார். பின்னர் நான் ஒரு காமெடியன். என்னுடைய டீமுக்காக தான் நான் விளையாடுகிறேன். என்னை கடைசியில் இப்படி அழ வெச்சிடீங்களே? என ஆதங்கத்தை கொட்டுகிறார். சாண்ட்ரா கூலாக நடந்து கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. இதை வைத்து பார்க்கும் போது சாண்டரா தன்னுடைய வேலையை யாருக்கும் தெரியாமல் கட்சிதமாக முடித்துள்ளார் என தெரிகிறது.