மளமளவென சரிந்த டிஆர்பி... தடாலடியாக மாறிய டாப் 10 தமிழ் சீரியல்களின் பட்டியல்..!

Published : Nov 06, 2025, 02:32 PM IST

டிஆர்பி ரேஸில் சன் டிவி சீரியல்களின் ரேட்டிங் மளமளவென சரிந்துள்ளது, அதேபோல் விஜய் டிவி சீரியல்கள் சற்று முன்னேற்றம் கண்டுள்ளன. இந்த வார டாப் 10 சீரியல்களின் பட்டியலை பார்க்கலாம்.

PREV
14
Top 10 Tamil Serial TRP Rating

சின்னத்திரை சீரியல்களுக்கு எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் ரெஸ்பான்ஸ் இருக்கிறது என்பதை அதற்கு கிடைக்கும் டிஆர்பி ரேட்டிங் மூலம் தான் கணிப்பார்கள். அந்த வகையில் தமிழ்நாட்டில் அதிகளவில் போட்டிபோட்டு சீரியல்களை ஒளிபரப்புவது சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சீரியல்கள் தான். இதில் டாப் 10 பட்டியலில் இடம்பிடிப்பது சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்கள் தான். ஜீ தமிழ் சீரியல்கள் அவ்வப்போது வரும். அந்த வகையில் 2025-ம் ஆண்டின் 43வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி நிலவரம் வெளியாகி உள்ளது. அதன் பட்டியலை விரிவாக பார்க்கலாம்.

24
டாப் 10 தமிழ் சீரியல்கள்

சன் டிவியின் புத்தம் புது சீரியலான ஹனுமன் கடந்த வாரம் 9வது இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் ஒரு இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு 10-ம் இடத்தை பிடித்துள்ளது. இதற்கு 6.94 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. கடந்த வாரம் 10வது இடத்தில் இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல், இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி 9-வது இடத்தில் உள்ளது. இந்த சீரியலுக்கு 7.45 புள்ளிகள் கிடைத்துள்ளன. விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான சிறகடிக்க ஆசை, கடந்த வாரத்தைக் காட்டிலும் டிஆர்பியில் முன்னேற்றம் கண்டாலும் 8-வது இடத்திலேயே நீடிக்கிறது. இந்த சீரியலுக்கு 8.18 புள்ளிகள் கிடைத்துள்ளன.

34
சரிவை சந்தித்த சன் டிவி

விஜய் டிவியின் அய்யனார் துணை சீரியல், 8.19 டிஆர்பி உடன் 7-ம் இடத்தை தக்க வைத்து உள்ளது. கடந்த வாரம் 8.68 புள்ளிகள் உடன் 6-ம் இடத்தில் இருந்த சன் டிவியின் அன்னம் சீரியல், இந்த வாரமும் அதே இடத்தில் நீடித்தாலும், டிஆர்பியில் சரிவை சந்தித்து 8.32 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. கடந்த வாரம் நான்காம் இடத்தில் இருந்த மருமகள் சீரியல், இந்த வாரம் 8.71 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. இந்த சீரியல் கடந்த வாரம் 9.17 புள்ளிகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மருமகள் சீரியலை பின்னுக்கு தள்ளி 4-ம் இடத்தில் உள்ள எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலும் டிஆர்பியில் சரிவை சந்தித்து இருக்கிறது.

44
முதலிடத்தை இழந்த சிங்கப்பெண்ணே

கடந்த வாரம் 8.96 புள்ளிகளை பெற்றிருந்த எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல், இந்த வாரம் 8.76 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. இதையடுத்து மூன்றாவது இடத்தில் கயல் சீரியல் நீடிக்கிறது. இந்த சீரியலுக்கு கடந்த வாரம் 9.65 புள்ளிகள் கிடைத்திருந்த நிலையில், இந்த வாரம் வெறும் 8.88 புள்ளிகளை மட்டுமே பெற்றிருக்கிறது. கடந்த வாரம் முதலிடத்தில் இருந்த சிங்கப்பெண்ணே சீரியல் இந்த வாரம் 9.62 புள்ளிகள் உடன் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. மூன்று முடிச்சு சீரியல் இந்த வாரம் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த வாரம் 10.55 புள்ளிகள் பெற்ற இந்த சீரியல் இந்த வாரம் வெறும் 9.69 புள்ளிகள் மட்டுமே பெற்றிருக்கிறது.

Read more Photos on
click me!

Recommended Stories