எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷனும் பார்கவியும் ஹனிமூன் கொண்டாட கிளம்பிய போது ஒரு புது குண்டை தூக்கிப் போட்டுள்ளார் அன்புக்கரசி. அதைப்பற்றி பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், அண்மையில் திருமணம் நடந்து முடிந்த தர்ஷன் - பார்கவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்த வண்ணம் இருந்தது. இதற்கு முக்கிய காரணம் அன்புக்கரசி தான். அவர் அடிக்கடி தர்ஷனுக்கு போன் போட்டு பேசி, தர்ஷன் - பார்கவி இடையே சண்டையை மூட்டிவிடப் பார்த்தார். இதனால் அதிரடி முடிவெடுத்த ஜனனி, நீங்கள் இருவரும் சில நாட்கள் வெளிய போயிட்டு வாங்க என சொல்லி, அவர்களை பெங்களூருவுக்கு அனுப்பி வைக்க பிளான் போடுகிறார். இதையெல்லாம் கிழே இருந்த அன்புக்கரசி மற்றும் கரிகாலன் ஒட்டுக்கேட்கிறார்கள். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
ஆதி குணசேகரனுக்கு கரிகாலன் சொன்ன விஷயம்
தர்ஷன் - பார்கவி இருவரும் ஹனிமூன் கொண்டாட பெங்களூரு போக உள்ள விஷயத்தை ஒட்டுக்கேட்ட கரிகாலன், அதை உடனடியாக ஆதி குணசேகரனுக்கு போன் போட்டு சொல்கிறார். இதைக்கேட்டு ஷாக் ஆன ஆதி குணசேகரன், டேய் கரிகாலா நான் சொல்றத அப்படியே செய் என ஒரு பிளானை சொல்கிறார். அந்த பிளான் வேறெதுவுமில்லை, அன்புக்கரசியை ஏவிவிட்டு, தர்ஷன் - பார்கவி இருவரும் பெங்களூரு செல்வதை தடுக்க வைக்க வேண்டும் என சொல்லி இருக்கிறார். இதை கரிகாலனும் அன்புக்கரசியிடம் சொல்ல, அவர் மறுநாள் காலை ஒரு புது குண்டை தூக்கிப் போடுகிறார்.
34
ஹனிமூன் கிளம்பும் தர்ஷன் - பார்கவி
தர்ஷன் - பார்கவி பெங்களூருக்கு கிளம்பும் முன்னரே, பையுடன் ரூமை விட்டு வெளியே வருகிறார் அன்புக்கரசி. அனைவரும் அதிர்ச்சியுடன் பார்க்க, தான் திருச்சிக்கு செல்வதாக சொல்கிறார் அன்பு. உனக்கென்ன நக்கலா, அன்னைக்கு வீட்டுக்கு வரும்போது எனக்கு யாருமே இல்லனு சொல்லி டிராமா பண்ணுன, இப்போ திருச்சிக்கு கிளம்புறேன்னு சொல்ற என தர்ஷினி கேட்கிறார். இதற்கு பதிலளிக்கும் அன்புக்கரசி, நான் ஒன்னும் தெரியாம தான் இருந்தேன், ஆனா இப்போ கத்துக்கிட்டேன் என அன்பு சொல்ல, இவ ஏதோ தேவையில்லாம பிரச்சனை பண்ணுவதை உணர்ந்த தர்ஷினி, தர்ஷனையும், பார்கவியையும் கிளம்ப சொல்கிறார்.
அப்போது குறுக்கிடும் அன்புக்கரசி, அதையே தான நானும் சொன்னேன். அவங்க பெங்களூர் போகப் போறாங்க, நான் திருச்சிக்கு போகப் போறேன் என சொல்கிறார். ஆமா உனக்கு எப்படி அவங்க பெங்களூரு போறது தெரியும் என தர்ஷினி கேட்க, இது என்ன பெரிய உலக ரகசியமா... புதுசா கல்யாணம் ஆனவங்க, ஒன்னு கொடைக்கானல் போவாங்க, ஆனா தர்ஷன் அங்க போகமாட்டார். ஏன்னா, அங்க போனா அவருக்கு அம்மா நியாபம் வரும். ஊரே உங்க அம்மாவை பத்தி மோசமா பேசிருக்கு. இவங்க அப்பாவை கல்யாணம் பண்ணிகிட்டு இன்னொருத்தர் கூட ஒரே வீட்டில் போய் ஒன்றாக இருந்தாங்கல்ல என ஈஸ்வரியை கொச்சைப் படுத்தும் விதமாக அன்புக்கரசி பேசியதைக் கேட்டு கடுப்பான தர்ஷினி, சட்டென, அன்புவின் கழுத்தை நெரிக்கிறார்.
என் அம்மாவை பத்தி தப்பா பேசுன உன்னை சாவடிச்சிடுவேன் என எச்சரிக்கிறார். ஆதி குணசேகரனின் பிளானால் விடே கலவர பூமியாக மாறி உள்ளது. இதையடுத்து என்ன சம்பவம் நடக்கப்போகிறது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.