சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து தன் முதல் கணவரின் அண்ணனை காரில் அழைத்து செல்ல இருப்பதை அறிந்த ரோகிணி, அதனை தடுத்து நிறுத்தி இருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணியின் முதல் கணவர் சேகரின் அண்ணன் சுப்ரமணி, திருமணமாகி 15 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் அதுகுறித்து செக் அப் பண்ண ஆஸ்பத்திரிக்கு வந்திருக்கிறார். அவர் முத்துவின் நண்பரும், வித்யாவின் கணவருமான முருகனின் சொந்தக்காரர் என்பதால், அவர் சென்னையில் தங்கி ஆஸ்பத்திரி சென்று வர, முருகன் தன் நண்பன் முத்துவின் காரிலேயே சென்றுவர ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார். இந்த விஷயத்தை வித்யா, ரோகிணியிடம் சொல்ல, அவர் முத்து இந்த சவாரிக்கு செல்வதை தடுக்க பிளான் போடுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
ரோகிணியின் சதி வேலை
வித்யாவிடம் சொல்லி, உன்னுடைய கணவர் முருகன் மூலம் முத்து சவாரி செல்வதை தடுக்க சொல்லிப் பார்க்கிறார் ரோகிணி. ஆனால் வித்யா, அதற்கு சம்மதிக்கவில்லை. இதையடுத்து மீனா வீட்டில் இல்லாததை பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்த ரோகிணி, வீட்டில் மாமனார் மட்டும் தனியாக இருந்தால் அவரைவிட்டு முத்து எங்கேயும் செல்ல மாட்டார் என்பதால், அண்ணாமலையை தனியாக இருக்க வைக்க திட்டம் போடுகிறார். இதற்காக அவருடன் வீட்டிலேயே இருக்கும் அவரின் மனைவி விஜயாவுக்கு போன் போட்டு தன்னிடம் ஒரு பாஸ் இருப்பதாகவும், அதை வைத்து பாண்டிச்சேரி சென்று வரலாம் என அழைக்கிறார்.
34
சவாரியை கேன்சல் பண்ணிய முத்து
விஜயாவும், தனக்கு வீட்டிலேயே இருப்பது ஒருமாதிரி இருப்பதால், ரோகிணி உடன் செல்ல சம்மதிக்கிறார். அதேபோல் ஸ்ருதியையும் அழைத்துச் செல்கிறார். இது பெண்கள் மட்டும் செல்லக்கூடிய பாஸ் என்பதால் அண்ணாமலையை வீட்டில் தனியே விட்டுச் செல்கிறார் விஜயா. இதையறிந்த முத்து, தானும் உங்களோடு வீட்டிலேயே இருக்கிறேன் என சொல்ல, அண்ணாமலை அவரிடம் நீ சவாரிக்கு போ என அனுப்ப முற்பட, அப்போது போன் போட்ட மீனா, மாமா தனியா இருந்தா நீங்க எங்கையும் போகாதீங்க என சொல்கிறார். இதனால் அண்ணாமலை உடன் வீட்டிலேயே இருக்க முடிவெடுக்கிறார் முத்து.
தனக்கு வந்த சவாரியை தன் நண்பனிடம் கொடுத்துவிடுகிறார். பின்னர் மனோஜும் ஷோரூம் போகாமல், வீட்டிலேயே இருக்க திட்டமிடுகிறார். ரவியும் ஹோட்டலுக்கு லீவு போட்டுவிடுகிறார். இதையடுத்து மூன்று பேரும் சேர்ந்து, தங்கள் தந்தையுடன் ஆட்டம் பாட்டம் என செம ஜாலியாக இருக்கிறார்கள். மறுபுறம் ரோகிணியும் விஜயா மற்றும் ஸ்ருதியோடு சேர்ந்து ரெசார்ட்டில் ஃபன் செய்கிறார். ரோகிணியால் தான் தனக்கு வந்த சவாரி கைநழுவி போனது என்பதை முத்து கண்டுபிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.