Revathi Drama against Muthuvel : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் சிலையை பற்றி முத்துவேல் ரேவதியிடம் புட்டு புட்டு வைத்துள்ளார். அது என்ன என்பது பற்றி பார்க்கலாம்.
கார்த்திகை தீபம் 2 சீரியலில் முத்துவேல் மற்றும் சிவனாண்டி இருவரும் சிலையை கடத்தி சென்ற நிலையில் பழி தூக்கி சாமுண்டீஸ்வரி மீது போட்டனர். பஞ்சாயத்திலும் அவர் நிரபராதி என்று நிரூபிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டனர். அதற்காக குழிக்குள் சென்று பின்னர் திரும்பவும் உயிருடன் வந்தால் அவர் சிலையை கடத்தவில்லை என்பது நிரூபணம் ஆகும். அப்படியில்லை என்றால் அவர் தான் அம்மன் சிலையை கடத்தியிருக்கிறார் என்று தீர்ப்பளிக்கப்படும் என்று பஞ்சாயத்தில் முடிவு செய்யப்பட்டது.
25
கார்த்திகை தீபம் 2 சீரியல் அப்டேட்
ஆனால், கார்த்திக் தனக்கு ஒரு நாள் அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து தனது அத்தையை காப்பாற்ற கார்த்திக் சிலையை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அம்மன் சிலை மீண்டும் கிடைத்தால் தான் கும்பாபிஷேகத்திற்கான முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெறும். அப்படியில்லை என்றால் 2ஆவது முறையாக கும்பாபிஷேகம் நின்றுவிடும்.
35
கார்த்திகை தீபம் 2 சீரியல் இன்றைய எபிசோடு
இந்த நிலையில் தான் கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய 1024ஆவது எபிசோடுக்கான புரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம். கார்த்திக் மற்றும் ரேவதி உள்பட அனைவரும் கும்பாபிஷேகம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வேலையிலும் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். ஆனால், முத்துவேல், சிவனாண்டி, காளியம்மாள் மற்றும் சந்திரகலா ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தவிடாமல் தடுக்க என்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து வருகிறார்கள்.
45
கார்த்திகை தீபம் 2 சீரியல்
அப்படித்தான் கோயிலிலிருந்து சிவனாண்டியும், முத்துவேலுவும் இணைந்து சிலையை கடத்தி இப்போது விற்கவும் முடிவு செய்துள்ளனர். ஆம், ரூ.10 லட்சத்திற்கு சிலையை விலை பேசியிருக்கிறார் முத்துவேல். இப்போது கும்பாபிஷேகத்தை நடத்தவும், தனது அத்தையை காப்பாற்றவும் கார்த்திக் போராடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு உறுதுணையாக ரேவதி இருக்கிறார்.
55
கார்த்திகை தீபம் 2
இந்த சூழலில் தான் தனது சித்தியின் மொபைல் போனிலிருந்து முத்துவேலுவிற்கு போன் போட்ட ரேவதி அவரைப் போன்று பேசி சிலை இருக்கும் இடத்தை கண்டுபிடித்துள்ளார். இதைத் தொடர்ந்து இதைப் பற்றி தனது கணவர் கார்த்திக்கிற்கு தெரியப்படுத்தியுள்ளார். அதன் பிறகு கார்த்திக் மீனாட்சி லாட்ஜிற்கு சென்று முத்துவேலுவிடமிருந்து சிலையை மீட்டெடுப்பாரா? தனது அத்தையை காப்பாற்றி கும்பாபிஷேகத்தை நல்லபடியாக நடத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.