சினிமா பின்புலம் கொண்ட குடும்பத்தில் இருந்து ஜெயம் ரவி நடிக்க வந்ததால்... இவர் தன்னுடைய ஆக்ட்டிங் கேரியரை குழந்தை நட்சத்திரமாகவே துவங்கி விட்டார்.
இவரின் முதல் படமான ஜெயம், அமோக வெற்றி பெற்றதால்... இந்த படத்தின் பெயரே அவரின் புனை பெயராக மாறியது....
இந்நிலையில் ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலியான, ஆர்த்தி என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது இரண்டு மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியின் பிறந்தநாள் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு கொண்டாடப்பட்ட நிலையில், இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, பிருந்தா மாஸ்டர், வைபவ் மற்றும் அவரின் மனைவி, துல்கர் சல்மான் உள்ளிட்ட பலர் இவரது பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இதோ...