தமிழ் - தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழிகளில் சுமார் 20 வருடங்களாக முன்னணி ஹீரோயினாக நடித்து வருபவர் திரிஷா. இடையில் சில சறுக்கல்களை சந்தித்தாலும், விடாப்பிடியாக நடித்து, 40 வயதிலும் தனக்கான மார்க்கெட்டை மெயின்டெய்ன் செய்து வருகிறார்.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வெற்றிக்கு பிறகு, குந்தவை திரிஷாவின் சினிமா கேரியர் மீண்டும் சூடுபிடிக்க துவங்கியுள்ள நிலையில், தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து வெளியான 'கில்லி' திரைப்படத்தை தொடர்ந்து 14 வருடங்களுக்குப் பின், மீண்டும் விஜய்க்கு ஜோடியாக 'லியோ' படத்தில் இணைந்துள்ளார். மல்டி ஸ்டார்ஸ் நடிப்பில், கேங் ஸ்டார் படமாக உருவாகி வரும் இந்த படம், ட்ரெண்டிங் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் படம் என்பதால், எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படமாக மாறியுள்ளது.
திருமணம் எப்போது..? ஒற்றை புகைப்படத்தை கூலாக வெளியிட்டு உண்மையை உடைத்த கீர்த்தி சுரேஷ்!
நடிகை திரிஷா 40 வயதை எட்டிவிட்ட போதிலும் இளம் ஹீரோயின் லுக்கில் ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்து வருகிறார். மேலும் இவர் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம் இம்மாதம் ஏப்ரல் 28ஆம் தேதி மிகப் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் தான் படக்குழுவினர் முழு கவனம் செலுத்தி வருகிறார்கள்.
மேலும் நாளுக்கு நாள் இவரின் அட்ராசிட்டி அதிகரித்து கொண்டே செல்கிறது. சமீபத்தில் கூட திரிஷா மீது நான் கோபத்தில் இருக்கிறேன். நாங்கள் அடிக்கடி போனில் தான் பேசிக் கொள்வோம். தற்போது இருவருக்குள்ளும் ஒரு சின்ன சண்டை என்பதால் பேசிக்கொள்ளவில்லை என தெரிவித்திருந்தார். இவரின் பேச்சுக்கு நெட்டிசன்கள் பலர் மீம்ஸ் போட்டு கலாய்த்து வந்தாலும், சிலர் இது ஒரு வேலை உண்மையாக இருக்குமோ? என்றும் கமெண்ட் போட்டு வந்ததை பார்க்க முடிந்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து அமைதி காத்து வந்த திரிஷாவின் தாயார், முதல் முறையாக அந்த வாய் திறந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் அந்த நபர் பேசுவதை கண்டு கொள்ளாமல் இருந்து விட வேண்டும். உண்மை என்ன என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். வீணாக இந்த பிரச்சனைக்குள் நாம் தலையிட்டால் அது பரபரப்பாக பேசப்படும் எனக் கூறியுள்ளாராம். இதனை பிரபல பத்திரிகையாளர் அந்தகன் என்பவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரபு தேவாவுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? ஒருவர் அப்பா ஜாடை.. இன்னொருவர் அம்மா ஜாடை! வைரலாகும் போட்டோஸ்!