மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில், வாரிசு நடிகை என்கிற அடையாளத்துடன் அறிமுகமானவர். காரணம், இவருடைய தாய் மேனகா, தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட சில முன்னணி நடிகர்களுக்கு ஹீரோயினாக நடித்து பிரபலமானவர்.
கீர்த்தி சுரேஷ் தமிழில் அறிமுகமான 'இது என்ன மாயம்' திரைப்படம், படுதோல்வியை சந்தித்த போதிலும், இரண்டாவதாக வெளியான, ரஜினி முருகன் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து ரெமோ, பைரவா, சாமி ஸ்கொயர், தானா சேர்ந்த கூட்டம், என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
இப்படத்திற்கு பின்னர், தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையே அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். அந்த வகையில், தற்போது இவர் கதையின் நாயகியாக நடித்த சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும், கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான தசரா திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
மேலும் ரிவால்வர் ரீட்டா, ரகு தாத்தா, மாமன்னன், போன்ற பல படங்கள் இவரின் கைவசம் உள்ளன முன்னணி நடிகையாக பல படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் அவ்வபோது, கீர்த்தியின் திருமண பேச்சு குறித்து சமூக வலைதளத்தில் பேச்சு அடிபட்டு வரும் நிலையில், இது நேரடியாகவே ஒரு ரசிகர் instagram பக்கத்தில் கீர்த்தி சுரேஷிடம் கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு கீர்த்தி சுரேஷ், வடிவேலு தன்னுடைய இரண்டு பாக்கெட்டிலும் கையை விட்டு ஒண்ணுமே இல்லை என்று காட்டுவது போல் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு, தற்போதைக்கு திருமண பேச்சுக்கு இடமில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம், சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Jayam Ravi: திரிஷாவை தொடர்ந்து.. ஜெயம் ரவியின் ட்விட்டர் ப்ளூ டிக் பறிப்பு! ஏன் தெரியுமா?