பிரபு தேவாவுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? ஒருவர் அப்பா ஜாடை.. இன்னொருவர் அம்மா ஜாடை! வைரலாகும் போட்டோஸ்!

First Published | Apr 17, 2023, 4:39 PM IST

நடிகர் பிரபு தேவாவின், இரண்டு மகன்களின் தற்போதைய லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாக... இவருக்கு இவ்வளவு பெரிய மகன்களா என ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
 

பிரபு தேவாவின் தந்தை முகுர் சுந்தர், ஒரு நடன இயக்குனர் என்பதாலும், தன்னுடைய மூன்று பிள்ளைகளுக்கும் நடன துறையில் ஆர்வம் இருந்ததாலும், அவர்களையும் நடன இயக்குனர்களாக மாற்றினார். இவரின் மூத்த மகன் ராஜு சுந்தரம், ஒரு சில படங்களில் நடித்துள்ளதோடு, பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

முகுர் சுந்தரம் - மஹாதேவம்மா தம்பதிக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர் தான் பிரபு தேவா. இவரும் ஒரு சாதாரண டான்ஸ் மாஸ்டராக திரையுலகில் காலடி எடுத்து வைத்து, பின்னர் இந்தியன் மைக்கில் ஜாக்சன் என அழைக்கும் அளவிற்கு, தன்னுடைய தனித்துவமான நடன திறமையால் ரசிகர்களை கவர்ந்தார். பிரபு தேவாவின் இளைய சகோதரர் நாகேந்திர பிரசாத், சில படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வந்தாலும், ராஜு சுந்தரம் மற்றும் பிரபு தேவா அளவுக்கு பிரபலமாகவில்லை.

Jayam Ravi: திரிஷாவை தொடர்ந்து.. ஜெயம் ரவியின் ட்விட்டர் ப்ளூ டிக் பறிப்பு! ஏன் தெரியுமா?

Tap to resize

பிரபு தேவா நடனத்தை தாண்டி, நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என உச்சம் தொட்ட பிரபலமாக இருந்து வருகிறார். அதிலும் கடந்த 5 வருடங்களாக தமிழ் படங்கள் நடிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் பல கெட்டமில் மிரட்டிய சைக்கோ திரில்லர் படமான பகீரா நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து பிளாஷ் பேக் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
 

இவருக்கு திரையுலக வாழ்க்கை சக்ஸஸ் ஃபுல்லாக அமைந்தாலும், நிஜ வாழ்க்கையில் பல சர்ச்சைகைகளுக்கு ஆளாகியுள்ளார். பிரபுதேவா தன்னுடைய நடன குழுவில் பணியாற்றிய, ரமலதா என்பவரை காதலித்து கடந்த 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஷால், ரிஷி, ஆதித் என மூன்று மகன்களும் உள்ளனர். இவர்களின் பிரபு தேவாவின் மூத்த மகனான விஷால், தன்னுடைய 12 வயதில் மூலையில் ஏற்பட்ட பிரச்சனையால் சிகிச்சை பலனின்றி 2008 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

கவர்ச்சி காத்து பலமா வீசுதே.! சேலையை சரியா விட்டு... மிடுக்காக முன்னழகை காட்டும் பிரியங்கா மோகன்!
 

மகனின் மரணம் பிரபு தேவாவை அதிகம் பாதித்தது. மிகுந்த மன உளைச்சலில் இருந்த பிரபு தேவாவை நயன்தாரா ஆறுதல் கூறி தேற்றிய போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களின் இந்த உறவு தான், பிரபு தேவா, அவரது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற காரணமாகவும் அமைந்ததாக கூறப்படுகிறது. 

மனைவியிடம் இருந்து 2010 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்ற பிரபு தேவா... பின்னர் நயன்தாராவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இவர்கள் உறவு திருமண பேச்சு வரை சென்று முடிவுக்கு வந்தது. மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தாலும், பிரபு தேவாவிற்கு அவரின் இரண்டு மகன்கள் என்றால் உயிர். எவ்வளவு வேலை இருந்தாலும், மகன்களுடன் நேரம் செலவழிக்கவும், அவர்கள் ஆசை பட்டத்தை செய்வதற்கும் தவறியதே இல்லை.

ஷர்ட்டை ஒரு பக்கம் கழட்டி... கிளாமர் அட்ராசிட்டி பண்ணும் டார்க் ஸ்கின் அழகி ரம்யா பாண்டியன்! அதிரி புரிதி ஹாட்

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர்... பிரபு தேவாவின் இரண்டு மகன்களின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி, ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இதில் ஒருவர்... அப்படியே அம்மா ஜாடையிலும் இன்னொருவர் அப்படியே அப்பா ஜாடையிலும் உள்ளார். அதே போல் ரசிகர்களின் இப்போதும் இளம் ஹீரோ போல் இருக்கும், உங்களுக்கு இவ்வளவு பெரிய மகனா? என ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள். 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, என பிஸியான நடிகர், இயக்குனர், நடன இயக்குனராக இருந்து வரும் பிரபு தேவா கடந்த 2020 ஆம் ஆண்டு ஹிமானி சிங் என்கிற மருத்துவர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த விஷயத்தில் கூட... தென்னிந்திய நடிகை என்றால் அசிங்கப்படுத்துவங்க? சமந்தா கூறிய ஷாக்கிங் தகவல்!

Latest Videos

click me!