நடிகர் விக்ரம் இன்று தனது 57-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக அவர் நடிப்பில் உருவாகி வரும் படங்களில் இருந்து முக்கிய அப்டேட்டுகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று காலை அவர் நடிக்கும் தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டு இருந்தது.
இதன்மூலம் இப்படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்ய உள்ளனர் என்பது உறுதியாகி உள்ளது. இதற்கு முன்னதாக விக்ரம் நடித்த சாமி திரைப்படம் இரண்டு பாகங்களாக ரிலீஸ் ஆகி உள்ளது. இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்த பொன்னியின் செல்வன் படமும் இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யப்பட உள்ள நிலையில், தற்போது துருவ நட்சத்திரம் படமும் அதேபாணியில் ரிலீசாக உள்ளதை படக்குழு உறுதி செய்துள்ளது.
துருவ நட்சத்திரம் படத்தை மே மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு இருந்த நிலையில், தற்போது அப்படத்தின் பணிகள் இன்னும் முடிவடையாததால் படத்தின் ரிலீசை மே மாதத்தில் இருந்து ஜூலை மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் விக்ரம் உடன் டிடி, ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... திரையுலகின் சீயானுக்கு இன்று பிறந்தநாள்... ‘கென்னி’ விக்ரம் பற்றி பலரும் அறிந்திடாத 10 ஆச்சர்ய தகவல்கள் இதோ