நிறைமாத நிலவே வா வா... நடைபோடு மெதுவா மெதுவா! கர்ப்பமாக இருக்கும் மனைவியுடன் போட்டோஷூட் நடத்திய துணிவு வில்லன்

Published : Apr 17, 2023, 02:43 PM IST

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை பூஜா ராமச்சந்திரன் உடன் அவரது கணவர் ஜான் கொக்கேன் நடத்தியுள்ள போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

PREV
17
நிறைமாத நிலவே வா வா... நடைபோடு மெதுவா மெதுவா! கர்ப்பமாக இருக்கும் மனைவியுடன் போட்டோஷூட் நடத்திய துணிவு வில்லன்

மியூசிக் சேனலில் தொகுப்பாளராக அறிமுகமாகி அதன் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் பூஜா ராமச்சந்திரன். அதன்மூலம் கிடைத்த பாப்புலாரிட்டி காரணமாக படிப்படியாக சினிமாவிலும் நடிக்கத் தொடங்கினார் பூஜா.

27

அந்த வகையில், இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா ஆகிய படங்களிலும் ராகவா லாரன்ஸின் காஞ்சனா 2 படத்திலும் நடித்து அசத்தினார். கடந்த 2010-ம் ஆண்டு கிரேக் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட பூஜா, 7 ஆண்டுகளில் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார்.

37

விவாகரத்துக்கு பின் ஜான் கொகேன் என்கிற மலையாள நடிகர் மீது காதல் வயப்பட்ட நடிகை பூஜா ராமச்சந்திரன், அவருடன் சில ஆண்டுகள் டேட்டிங் செய்து, பின்னர் 2019-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டு கணவன் மனைவியாக வாழத்தொடங்கினர்.

இதையும் படியுங்கள்.... விஜய் சேதுபதி விலகிய முத்தையா முரளிதரன் பயோபிக்கில் ஹீரோவாக நடிக்கபோவது யார்? பர்ஸ்ட் லுக் உடன் வந்த அப்டேட்

47

நடிகர் ஜான் கொகேன் தென்னிந்திய திரையுலகில் வில்லன் நடிகராக கலக்கி வருகிறார். பாகுபலி, கேஜிஎஃப் போன்ற பிரம்மாண்ட படங்களில் வில்லனாக நடித்துமிரட்டிய இவர், சமீபத்தில் அஜித் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆன துணிவு படத்திலும் மெயின் வில்லனாக நடித்து அசத்தி இருந்தார்.

57

ஜான் கொகேன் - பூஜா தம்பதிக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது அவர்கள் தங்களது முதல் குழந்தையை வரவேற்க தயாராகி வருகின்றனர்.

67

கர்ப்பமாக இருக்கும் பூஜாவுக்கு இன்னும் சில வாரங்களில் குழந்தை பிறக்க உள்ளது. இதையொட்டி அவருடன் விதவிதமாக கர்ப்பகால போட்டோஷூட் நடத்தி வருகிறார் ஜான் கொகேன்.

77

கடற்கரை ஓரம் ரொமாண்டிக் போஸ் கொடுத்தபடி நடிகர் ஜான் கொகேன் - நடிகை பூஜா ராமசந்திரன் ஜோடி நடத்தியுள்ள போட்டோஷூட் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்.... பொன்னியின் செல்வன் விழாவில் லியோ அப்டேட் சொல்லி அதிரவைத்த ‘குந்தவை’ திரிஷா... அப்படி என்ன சொன்னாங்க?

click me!

Recommended Stories