தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருக்கும் தளபதி விஜய்க்கு, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. விஜய்யின் சூட்டிங் மற்றும் ஆடியோ லஞ்ச் போன்ற நிகழ்ச்சிகள் சென்னை சுற்று வட்டார பகுதிகளில் நடக்கிறது என்று தெரிந்தாலே, தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், விஜய்யை பார்க்க ரசிகர்கள் கூடி விடுவார்கள். அந்த அளவுக்கு தளபதி மீது அன்பு காட்டும் வெறித்தனமான ரசிகர் & ரசிகைகள் உள்ளார்.
பொதுவாகவே தளபதியின் ரசிகர்கள் அனைவருக்குமே, அவரை நேரில் சந்தித்து, அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது மிகப்பெரிய கனவு. இந்த கனவு சில ரசிகர்களுக்கு நிஜமானாலும், பல ரசிகர்களால் அவரை சந்திக்க முடிவதில்லை. அந்த வகையில் தற்போது தமிழ்ச்செல்வி என்கிற பதினோராம் வகுப்பு மாணவி, காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு தன்னுடைய பெற்றோருடன் சுற்றுலா வந்த நிலையில், தளபதி விஜய்யை பார்க்க வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் வீட்டில் இல்லாததால், கேட் பூட்டப்பட்டிருந்தது.
பிரபு தேவாவுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? ஒருவர் அப்பா ஜாடை.. இன்னொருவர் அம்மா ஜாடை! வைரலாகும் போட்டோஸ்!
இதை தொடர்ந்து விஜய்யின் வீட்டு முன்பு, கைகூப்பி.. வாசலில் விழுந்து கும்பிட்டு, உங்களை பார்க்க வேண்டும் என ஆசையாக இருக்கிறது. வீடு வரைக்கும் வந்துட்டேன், ஆனா உங்கள பாக்க முடியல... என விஜய்யின் வீட்டு கேட்டை கட்டி பிடித்தது போல் நின்று கண்ணீர் மல்க விஜயின் வீட்டு சிசிடிவி கேமரா முன்பு பேசி உள்ளது, அனைவரது நெஞ்சங்களையும் நெகிழ வைத்துள்ளது.
மேலும் தன்னுடைய வீடியோவை பார்த்துவிட்டு விஜய் தன்னை அழைக்க வேண்டும் என்றும், அவருடன் ஒரே ஒருமுறை போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என தன்னுடைய ஆசையையும் வெளிப்படுத்தியுள்ளார் தமிழ்ச்செல்வி. இவர் மட்டுமல்லாது இவருடைய பெற்றோரும் விஜய்யின் தீவிர ரசிகர்கள் என கூறப்படுகிறது. சமீபத்தில் தளபதி விஜய்க்கு, என் கிட்ட எல்லாம் பேச மாட்டீங்களா என சுட்டி குழந்தை ஒன்று வெகுளித்தனமாக கேட்டு அழுது அடம் பிடித்த வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலான தொடர்ந்து.. தளபதி விஜய் அந்த குழந்தைக்கு வீடியோ கால் போட்டு பேசியது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.
Jayam Ravi: திரிஷாவை தொடர்ந்து.. ஜெயம் ரவியின் ட்விட்டர் ப்ளூ டிக் பறிப்பு! ஏன் தெரியுமா?
இதைத்தொடர்ந்து இந்த பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவியின் ஆசையை நிறைவேற்றும் விதமாக, விஜய் அவரை அழைத்து பேசுவாரா? அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு மாணவியின் ஆசையை நிறைவேற்றுவாரா என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்த வீடியோவை பார்த்தபின் விஜய்யின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..