பொன்னியின் செல்வன் படத்தை வேறு எந்த படத்துடன் ஒப்பிட வேண்டாம் எனக்கூறிய ஜெயம்ரவி , இரண்டாம் பாகத்துடன் ஒப்பிடுங்கள் என தெரிவித்தார். எவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்தபடம், எவ்வளவு தேவையான படம்னு ரசிகர்களுக்கு புரியும் எனவும் இங்குள்ள பெண்கள் தான் என்னை காப்பாற்ற வேண்டும், பெத்தது சோறுபோட்டது அம்மா, அன்பு கொடுத்தது அக்கா, மனைவி உயிருக்கு உயிராக பார்த்திருக்கிறவர் என கூறிய ஜெயம்ரவி, மனைவிகிட்ட இருந்து ஆண்டவன் தான் காப்பற்ற வேண்டும், மாட்டிக்காம இருக்கிறது என்ன வழியோ அதை பாருங்க என நகைசுவையாக பேசினார்.