
கோலிவுட் திரையுலகில் 'ஜெயம்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஜெயம் ரவி. இந்த படத்தை தொடர்ந்து, இவர் தேர்வு செய்து நடித்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மழை ,உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், பேராண்மை, தீபாவளி, மிருதன், கோமாளி, டிக் டிக் டிக், போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
குறிப்பாக ஜெயம் ரவி வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது இவர், அவரின் சகோதரர் மோகன் ராஜா இயக்கத்தில் நடித்த தனி ஒருவன் திரைப்படம் தான். அதைபோல் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், ராஜராஜ சோழனாக தன்னுடைய கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்த பலரும் ஜெயம் ரவி ராஜ ராஜ சோழன் கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருந்ததாக தெரிவித்தனர். அதேபோல் மற்ற நடிகர்களின் தேர்வும், அதிகம் பாராட்டப்பட்டது.
வீட்டில் இருக்கும் போது நாக சைதன்யா என்னிடம் இப்படித்தான் நடந்து கொள்வாராம்! சமந்தா பகிர்ந்த தகவல்!
ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக காதலிக்க நேரமில்லை மற்றும் ஜீனி என்கிற ஃபேண்டஸி திரைப்படம் வெளியாக உள்ளது. அதேபோல் சமீபத்தில் புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க ஜெயம் ரவி கமிட் ஆன நிலையில், சிவகார்த்திகேயனுடன் எஸ் கே 25 திரைப்படத்திலும் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.
திரையுலகில் ஒரு பக்கம் பிஸியாக வலம் வரும் ஜெயம் ரவி, கடந்த செப்டம்பர் மாதம் தன்னுடைய மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து பெற உள்ளதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் குடும்ப நலன் கருதியே இந்த முடிவை ஜெயம் ரவி எடுப்பதாக அறிவித்தார். ஆனால் ஆர்த்தி தரப்பில் இருந்து இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தன்னுடைய தரப்பு விளக்கத்தை அறிக்கையாக வெளியிட்ட ஆர்த்தி, மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ தயாராக இருப்பதாக அறிவித்தார். தன்னுடைய இந்த போராட்டத்திற்கு சட்டம் துணை நிற்கும் என்பது போல் தெரிவித்தார்.
அதர்வா முதல் ராமராஜன் வரை! டிசம்பர் 20 ஓடிடி-யை ஆக்கிரமித்த நடிகர்களின் படங்கள்!
ஆனால் ஜெயம் ரவியோ, தன்னுடைய மனைவி தன்னிடம் இருந்த அனைத்தையும் பிடுங்கிக் கொண்டதாகவும், தன்னுடைய பெயரில் சென்னை அடையாறில் உள்ள வீட்டில் தான் தற்போது வசித்து வருவதாகவும் தெரிவித்தார். பிரதர் படத்தின் செய்தியாளர் சந்திப்புக்கு கூட ஜெயம் ரவி வாடகை காரில் வந்து சென்றது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து மிகவும் எமோஷனலாக தன்னுடைய பேட்டிகளிலும் பேசிய ஜெயம் ரவி, கோடி கணக்கில் சம்பளம் வாங்கினாலும் தற்போது வரை தனக்கென்று பேங்க் அக்கவுண்ட் கூட இல்லை என கூறினார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை கூட என் மனைவி தான் நிர்வகித்து வருகிறார். பல சமயங்களில் என்னுடைய போனை கூட அவர்தான் வைத்திருப்பார். வேலைக்காரர்கள் முன்பு என்னை பலமுறை அசிங்க படுத்தியுள்ளார் என்று தன் மனதில் இருந்த ஒட்டுமொத்த பாரத்தையும் இறக்கி வைத்தார்.
மேலும் ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தை நாடினார். ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் விவாகரத்து வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம் இருவரையும் மனம் விட்டு பேச அறிவுரை வழங்கியது. இதற்காக ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் சமீபத்தில் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் சமாதான பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. மீண்டும் இருவருக்கும் இடையே சமாதான பேச்சு வார்த்தை நடக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஆர்த்தி - ஜெயம் ரவி விவாகரத்து வழக்கு குறித்து, மத்தியஸ்தர் தரப்பில் இருந்து சமரச பேச்சு வார்த்தை முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மீண்டும் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இணைய வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர். மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்து குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எதிர்பாராத போட்டியாளரை வெளியேற்றி ட்விஸ்ட் கொடுத்த பிக்பாஸ்! கண்ணீரோடு வெளியே சென்றது யார் தெரியுமா?