Actress Samantha
தென்னிந்திய திரையுலகம் பொறாமைப்படும் படி, வாழ்ந்த இளம் நட்சத்திர ஜோடிகள் சமந்தா - நாக சைதன்யா. இருவரும் சுமார் 7 வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், காதலித்த ஆண்டுகளை விட மிக வேகமாக தங்களின் திருமண வாழ்க்கைக்கு எண்டு கார்டு போட்டனர். அதன்படி, நாக சைதன்யா, சமந்தா நடிக்கும் பட விஷயங்களில் தலையிட்டதால் ஏற்பட்ட சிறு பிரச்சனை பின்னர் பெரிதாக வெடித்தது. நாக சைதன்யா மீது உள்ள கோவத்தை வெளிப்படுத்தும் விதமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அக்கினேனி என்கிற குடும்ப பெயரை நீக்கி விவாகரத்து சர்ச்சையை கொளுத்தி போட்ட சமந்தா, பின்னர் 2021-ஆம் ஆண்டு அதிரடியாக விவாகரத்து செய்து பிரியா உள்ளதை உறுதி செய்தார்.
Samantha and Naga Cahitanya Divorce
நாக சைதன்யாவும் இந்த தகவலை உறுதி செய்த நிலையில், இந்த விவாகரத்து பிரச்சனையில் நாக சைதன்யாவை விட சமந்தாவின் தலை தான் உருண்டது. சில தொலைக்காட்சியில் சமந்தா - நாகசைதன்யா விவாகரத்து பற்றி, சில டிபேட் நிகழ்ச்சிகளே நடந்தது. அந்த அளவுக்கு மிகவும் பரபரப்பாக இவர்களின் விவாகரத்து பேசப்பட்டது.
சமந்தா திரைப்படங்களில் நடிப்பதால் நாக சைதன்யாவை மதிக்கவில்லை, குழந்தை பெற்று கொடுக்கவில்லை, கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்தினார் என ஏகப்பட்ட வதந்திகள் பரவியது. முடிந்தவரை அனைத்துக்கும் அமைதியாக இருந்த சமந்தா... விமர்சனங்கள் அத்துமீறிய போது அறிக்கை வெளியிட்டு இதற்க்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அதர்வா முதல் ராமராஜன் வரை! டிசம்பர் 20 ஓடிடி-யை ஆக்கிரமித்த நடிகர்களின் படங்கள்!
Naga Chaitanya and Samantha Wedding
தற்போது சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து பெற்று 3 வருடங்கள் ஆகும் நிலையில், நாக சைதன்யா விவாகரத்து பெற்ற ஒரே வருடத்தில் பொன்னியின் செல்வன் பட நடிகையான 'சோபிதாவை' காதலித்து திருமணம் செய்து கொண்டார். டிசம்பர் 8-ஆம் தேதி ஹைதாராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நாக சைத்னயா - சோபிதா திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன்னனி சோபிதாவுக்கு நாக சைதன்யா போட்ட சில நிபந்தனைகள் பற்றிய தகவல்கள் வெளியானது.
அதே போல் நாகர்ஜூனாவும், நாக சைதன்யாவின் முதல் திருமணத்தில் ஏற்பட்ட தவறு இரண்டாவது திருமணத்தில் நடந்து விட கூடாது என இருவரையும் அழைத்து பேசியதாகவும் கூறப்பட்டது.
Samantha Shared Flash Back Interview
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, தற்போது சமந்தா தன்னுடைய பழைய பேட்டி ஒன்றில் நாக சைதன்யா வீட்டில் இருக்கும் போது தன்னிடம் எப்படி நடந்து கொள்வார் என கூறிய தகவல் வைரலாகி வருகிறது. அதாவது சமந்தா ஷூட்டிங் முடித்து விட்டு வீட்டுக்கு வந்து விட்டால், ஒரு நடிகை என்கிற இமேஜ் இருவருக்கும் கிடையாது. நீ ஒரு சாதாரண இல்லத்தரசி என்பதை நினைவில் வைத்து கொள்ளவேண்டும். வீட்டிற்கு தேவையான பொருட்கள், சமையலுக்கு தேவையான பொருட்கள் இருக்கிறதா என்பதை பார்த்து அதனை வாங்க வேண்டியது நம் பொறுப்பு என அக்கறையோடு சொல்வார். என்னிடம் ஒரு சாதாரண கணவராக மட்டுமே நடந்து கொள்வார் என தெரிவித்திருந்தார்.
எதிர்பாராத போட்டியாளரை வெளியேற்றி ட்விஸ்ட் கொடுத்த பிக்பாஸ்! கண்ணீரோடு வெளியே சென்றது யார் தெரியுமா?
Samantha Ex Husband Naga Chaitanya
மற்றபடி விவாகரத்துக்கு பின்னர் சமந்தா, தன்னுடைய முன்னாள் கணவரான நாக சைதன்யா குறித்து இதுவரை எந்த ஒரு குற்றச்சாட்டையும் முன் வைக்கவில்லை. பாலிவுட் நிகழ்ச்சி ஒன்றில் மட்டும் கோவத்தை வெளிப்படுத்தியது போல் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் நாக சைதன்யாவிடம் இருந்து பிரிந்தாலும், தற்போது வரை சமந்தா நாகர்ஜுனா, அமலா, அகில் ஆகியோரிடம் நல்ல முறையில் தான் பேசி வருவதாக பாலிவுட் திரையுலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
Samantha About Naga Chaitanya
நாக சைத்னயா திருமணத்தை தொடர்ந்து சமந்தாவின் இரண்டாவது திருமணம் குறித்தும் அவ்வப்போது பல வதந்திகள் வெளியாகி வந்தாலும் அதற்க்கு, இதுவரை சமந்தா தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை. சமந்தா 'டிராலா மூவிங் பிக்சர்ஸ்' என்ற ஒரு பேனரைத் தொடங்கியுள்ள நிலையில். 'மா இன்டி பங்காரு' என்ற ஒரு திட்டத்தை அறிவித்தார். கூடிய விரைவில் இந்த படம் குறித்த மற்ற தகவல் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
அம்மா வனிதா விஜயகுமார் ரொமான்ஸ் செய்யும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்த மகள் ஜோவிகா!