
100 நாட்களை மையமாக வைத்து, விஜய் டிவியில் நடத்தப்பட்டு வரும் கேம் ஷோ பிக்பாஸ். ஹிந்தியில் இந்த நிகழ்ச்சி பல வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தாலும், தமிழில் கடந்த 2017-ஆம் ஆண்டு தான் துவங்கப்பட்டது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய முதல் சீசன் பல சர்ச்சைகளுக்கு ஆளான நிலையில், பின்னர் தன்னுடைய நேர்த்தியான நிகழ்ச்சி தொகுப்பாலும், ஆழமான கருத்துக்களால் இந்த நிகழ்ச்சிக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார் கமல்.
தொடர்ந்து 6 சீசன்கள் நேர்த்தியாக கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தாலும், 7-ஆவது சீசனில் பல சர்ச்சைகளுக்கு ஆளானது இவருடைய கருத்துக்கள். குறிப்பாக பிரதீப் ஆண்டனியின் ரெட் கார்டு விஷயம் பூகம்பமாக வெடித்தது. தன்னுடைய விக்ரம் படத்தில் நடித்த மாயாவை பல நேரங்களில் கமல்ஹாசன் காப்பாற்றியதாகவும், கண்டிப்பது போல் கண் துடைப்பு செய்கிறார் என்றும் நெட்டிசன்கள் விமர்சித்தனர். அதற்க்கு ஏற்றாப்போல் தான் கமல்ஹாசனும் ஒரு சார்ப்பு ஆதரவாளர் போல் நடந்து கொண்டார்.
அம்மா வனிதா விஜயகுமார் ரொமான்ஸ் செய்யும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்த மகள் ஜோவிகா!
பிரதீப் ஆண்டனியின் வெளியேற்றம் விவாதத்திற்கு ஆளானபோது அதை மூடி மறைக்க கமல் செய்தது பிக்பாஸ் ரசிகர்களையே கோவத்தில் ஆழ்த்தியது. அதே போல் பிக்பாஸ் மேடையை ஒரு அரசியல் பிரச்சார மேடையாக கமல் மாற்றி விட்டதாகவும், பல சமயங்களில் இது ஒரு ரியாலிட்டி பொழுது போக்கு நிகழ்ச்சி என மறக்க செய்யும் விதத்தில், இந்த நிகழ்ச்சியில் அரசியல் நெடி வீசுவதாக தெரிவித்தனர்.
இதுபோன்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், தன்னுடைய பர்சனல் காரணங்களுக்காகவும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகினார். தற்போது விஜய் சேதுபதி தன்னுடைய ஸ்டைலில் பிக்பாஸ் நிகழ்ச்சியை மாஸாக தொகுத்து வழங்கி வந்தாலும், போட்டியாளர்களுக்கு பேச இடம் கொடுப்பதே இல்லை என்கிற ஒரு குற்றச்சாட்டும் இவர் மேல் உள்ளது.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி 76 நாட்களை எட்டியுள்ள நிலையில், இந்த வாரம் யார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த வாரம் அன்ஷிதா தான் கடைசி இடத்தில் இருப்பதாகவும், அவர் தான் வெளியேற வாய்ப்புள்ளதாக நெட்டிசன்கள் கூறி வந்த நிலையில், யாரும் எதிர்பாராத போட்டியாளரான 'ரஞ்சித்' தான் இந்த வாரம் வெளியேறியுள்ளார். எப்படியும் ஃபிரீஸ் டாஸ்க் வரை இவர் உள்ளே இருக்க வாய்ப்புகள் உள்ளன. இவரின் மனைவி பிரியா ராமன் உள்ளே வரும் காட்சிகளுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என ரசிகர்கள் நினைத்தனர். அனால் தற்போது ரஞ்சித் வெளியேறியுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் பெரிதாக தன்னுடைய திறமையை வெளிப்படுத்தாமல் அமைதியாகவே விளையாடி வந்த ரஞ்சித், போட்டியாளர்கள் அனைவருடனும் ஒரு உறவினர் போல் பழகினார். எனவே இவரின் வெளியேற்றத்தை கண்ணீருடன் தான் ஏற்றுக்கொண்டுள்ளார் மற்ற ஹவுஸ் மேட்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹீரோயின்களையே அழகில் ஓவர் டேக் செய்யும் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் மனைவி மோனிஷா; போட்டோஸ்!