அம்மா வனிதா விஜயகுமார் ரொமான்ஸ் செய்யும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்த மகள் ஜோவிகா!

First Published | Dec 21, 2024, 10:05 AM IST

நடிகை வனிதா விஜயகுமார் நடித்துள்ள, ரொமான்டிக் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அவரின் மகள் ஜோவிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, அது வைரலாகி வருகிறது.
 

Vanitha Vijayakumar Start Carrier 15 Age

நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவி, மஞ்சுளாவுக்கு மூத்த மகளாக பிறந்தவர் வனிதா விஜயகுமார். தளபதி விஜய்க்கு ஜோடியாக, 1995-ஆம் ஆண்டு சந்திரலேகா திரைப்படத்தில், தன்னுடைய 15 வயதிலேயே கதாநாயகியாக அறிமுகமானார். 2 தமிழ் படங்களில் மட்டுமே நடித்த வனிதா விஜயகுமார் மலையாளம், தெலுங்கு, போன்ற தென்னிந்திய மொழிகளிலும் தலா ஒரு படத்தில் நடித்திருந்தார்.

Vanitha Vijayakumar Debut Thalapathy Vijay Heroine

இதை தொடர்ந்து வனிதா விஜயகுமார், தன்னுடைய 19 வயதிலேயே தன்னுடன் நாடகத்தில் நடித்த ஆகாஷ் என்பவரை காதலித்து 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். திருமணத்திற்கு பின்னர் முழுமையாக திரையுலகில் இருந்து விலகிய வனிதா விஜயகுமாருக்கு,  விஜய ஸ்ரீ ஹரி மற்றும் ஜோவிகா என இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். ஜோவிகா வயிற்றில் இருக்கும்போதே ஆகாஷ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தன்னுடைய பெற்றோர் வீட்டில் தஞ்சமடைந்த வனிதா விஜயகுமார், ஜோவிகா பிறந்த கையோடு ஆகாஷை விவாகரத்து செய்தார்.

'லால் சலாம்' ஓப்பனிங் வசூலை சல்லி சல்லியாய் நொறுக்கிய 'விடுதலை 2'! முதல் பாகத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
 

Tap to resize

Vanitha Vijayakumar Life

இதன் பின்னர் விவாகரத்தான சில மாதங்களிலேயே, ஆனந்த் ஜெயராமன் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். தன்னுடைய இரண்டாவது திருமணம் மூலம் வனிதா விஜயகுமாருக்கு ஜெயனிதா என்கிற மகள் பிறந்தார். ஆறு வருடங்கள் மட்டுமே ஆனந்த் ஜெயராமனுடன் வனிதா விஜயகுமார் வாழ்ந்த நிலையில், பின்னர் அவரிடம் இருந்தும் விவாகரத்து பெற்று பிரிந்தார். 

Vanitha Vijayakumar Romantic Movie

இதைத்தொடர்ந்து மீண்டும் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், நடிகையாகவும் என்ட்ரி கொடுத்தவருக்கு தோல்வியே மிஞ்சியது. இந்த படத்தின் ப்ரோமோஷன்காக தன்னுடைய படத்தின் நாயகனும், இயக்குனருமான ராபட்டை காதலிப்பதாக வனிதா விஜயகுமார் கூறியது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இது குறித்து இருவருமே மாற்றி மாற்றி ஒருவருக்கொருவர் குறை கூறி வந்தார்களே தவிர, இருவருக்கிடையையும் காதல் இருப்பதாக ஒப்புக்கொள்ளவில்லை.

ஹீரோயின்களையே அழகில் ஓவர் டேக் செய்யும் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் மனைவி மோனிஷா; போட்டோஸ்!

Vanitha Vijayakumar and Robert Movie

மேலும் ராபர்ட் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, தனக்கு திருமணமாகி மகள் ஒருவர் இருப்பதாக உருக்கமாக கூறினார். மனைவியுடன் விவாகரத்து பெற்ற ராபர்ட், தற்போது வேறு ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் அறிவித்தார். ஆனால் அது யார் என்பதை அவர் வெளிப்படுத்தவில்லை. மேலும் வனிதாவும் தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடித்து வருவதோடு, சச்சையான கதாபாத்திரத்தை கூட படுக்கூலாக தேர்வு செய்து நடிக்கிறார்.

ஏற்கனவே பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு ஜோடியாக 'பிக்கப் டிராப்' என்கிற திரைப்படத்தில் நடித்த நிலையில், அந்த படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இதைத் தொடர்ந்து வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்துள்ள திரைப்படம் Mrs அண்ட் Mr.

Vanitha Vijayakumar Mrs & Mr Movie First Look

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்தது. மேலும் இந்த படத்தின் இன்ட்ரோ டீசர் உள்ளிட்டவை சச்சைக்கு பஞ்சம் இல்லாத வகையில் வெளியாகியது. இதைத் தொடர்ந்து Mrs and Mr திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ராபட்டை கட்டி அணைத்து, வனிதா விஜயகுமார் ரொமான்ஸ் செய்வதுபோல் உள்ளது. இதனை வனிதாவின் மகளான ஜோதிகா விஜயகுமார் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

49 வயதில் அஜித் பட ஹீரோயினுக்கு பிரபல நடிகருடன் நடந்த இரண்டாவது திருமணம்!

Latest Videos

click me!