
நிறங்கள் மூன்று:
இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், நவம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'நிறங்கள் மூன்று'. இந்த வாரம் டிசம்பர் 20-ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்தப் படத்தை ஐயங்காரன் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம், கருணாமூர்த்தி தயாரித்துள்ளார். அதர்வா ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில், நடிகர் சரத்குமார் மற்றும் ரகுமான், அம்மு அபிராமி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் திரையரங்கில் பெற்ற வரவேற்பை விட ஓடிடி நல்ல வரவேற்பை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
'நிறங்கள் மூன்று' படத்திற்கு டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீஜித் சாரங்கன் படத்தொகுப்பு செய்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாமானியன்:
நடிகர் ராமராஜன் பல வருடங்களுக்கு பின்னர் ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் 'சாமானியன்'. இந்த படத்தை இயக்குனர் ராகேஷ் இயக்க , மதியழகன் என்பவர் தயாரித்திருந்தார். இந்த படத்தில் ராமராஜரை தவிர எம்.எஸ். பாஸ்கர், கே எஸ் ரவிக்குமார், போஸ் வெங்கட், மைம் கோபி, சரவண சுப்பையா, வினோதினி வைத்தியநாதன், தீபா ஷங்கர், ஸ்மிருதி வெங்கட், அபர்னதி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மே 23ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம், சுமார் 7 மாதங்கள் கழித்து டென்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க, அருள்செல்வன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராம் கோபி படத்தொகுப்பு பணிகளை கவனித்தார். திரையரங்கில் தவற விட்ட ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து ரசிக்க இது அறிய வாய்ப்பாக மாறியுள்ளது.
எதிர்பாராத போட்டியாளரை வெளியேற்றி ட்விஸ்ட் கொடுத்த பிக்பாஸ்! கண்ணீரோடு வெளியே சென்றது யார் தெரியுமா?
ஜீப்ரா:
நவம்பர் 22ஆம் தேதி, தெலுங்கில் வெளியான திரைப்படம் 'ஜீப்ரா'. ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் உருவான இந்த படத்தில், சத்யதேவ் ஹீரோவாக நடிக்க, பிரியா பவானி சங்கர் இந்த படத்தின் மூலம் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் தனஜெயா, சத்யராஜ், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படம், ஒரே மாதத்தில் ஓடிடிக்கு பேக்கப் ஆகியுள்ளது. அதன்படி டிசம்பர் ஆஹா ஓடிடி தளத்தில், டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு அனில் க்ரிஷ் என்பவர் படத்தொகுப்பு செய்ய, சத்யா பொன்மார் ஒளிப்பதிவு செய்துள்ளார் ரவி பஸ்ரூர் இசையமைத்திருந்தார்.
முரா:
மலையாள திரைப்படமான 'முரா' நவம்பர் 8ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆன நிலையில், இந்த வாரம் பிரைம் ஓடிடி தளத்தில் டிசம்பர் 20 அன்று வெளியாகி உள்ளது. முகமத் முஸ்தபா இயக்கியிருந்த இந்த படத்தில், சுராஜ் வெஞ்சரமூடு முன்னிலை கதாபாத்திரத்தில் நடிக்க, ஹிந்து ஹரூன், மாலா பார்வதி, பி எல் தேனப்பன், உள்ளிட்டா பலர் நடித்துள்ளனர். ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் இந்த படத்தை ரியா சிபு தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதை தவிர இந்த வாரம், ஹாலிவுட் படங்களான ட்விஸ்ட்டர்ஸ், டியர் சாண்டா, தி பிரிட்ஜ், சிக்ஸ் ட்ரிபிள் எய்ட், போன்ற பல ஹாலிவுட் பல ஹாலிவுட் படங்கள் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆனால் தென்னிந்திய மொழி படங்கள் ஓடிடியில் மிக குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.