Baby john movie
தெறி படத்தின் இந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தை அட்லீ தயாரித்துள்ளார். வருண் தவான், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் டிசம்பர் 25-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Atlee Kapil Sharma
அந்த வகையில் பேபி ஜான் படத்தின் புரமோஷன் பணிகளுக்காக கபில் ஷர்மாவின் நிகழ்ச்சியில் அட்லீ, வருண் தவான், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய கபில் ஷர்மா, அட்லீயின் நிறத்தை மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார். அப்போது “ நீங்கள் யாரையாவது சந்திக்க செல்லும் போது, அவர்கள் அட்லீ என்று கேட்டார்களா” என்று நகைச்சுவையாக கேள்வி எழுப்பினார்.
Kapil sharma mocks atlee
x
அதற்கு பதிலளித்த அட்லீ “ உங்கள் கேள்வியின் அர்த்தம் எனக்கு புரிகிறது. இந்த நேரத்தில் என் முதல் படத்தை தயாரித்த ஏ.ஆர். முருகதாஸுக்கு நான் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். அவர் என்னிடம் கதையை மட்டும் தான் கேட்டார். என் திறமையை மட்டுமே அவர் பார்த்தார். நான் எப்படி இருக்கிறேன் என்றெல்லாம் அவர் பார்க்கவில்லை. நான் கதை சொன்ன விதம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த உலகமும் இப்படி தான் இருக்க வேண்டும். ஒருவரின் இதயத்தை வைத்து தான் ஒருவரை மதிப்பிட வேண்டுமே தவிர, தோற்றத்தை வைத்து அல்ல.” நிதானமாக பதிலடி கொடுத்தார் அட்லீ.
Atlee
எனினும் கபில் ஷர்மாவின் இந்த கேள்வி இணையத்தில் சர்ச்சையை கிளப்பியது. அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் அட்லீக்கு ஆதரவாக பலரும் கருத்து பதிவிட்டு வந்தனர். அந்த வகையில் பிரபல பாடகி சின்மயி ஸ்ரீபிரதா அட்லீ ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளார்.
Chinmayi condemns Kapil Sharma
அவரின் பதிவில் ““நகைச்சுவை என்ற பெயரில் ஒருவரின் தோல் நிறத்தைப் பற்றி கிண்டல் செய்யும், மோசமான மற்றும் இனவெறி நகைச்சுவைகளை அவர்கள் ஒருபோதும் நிறுத்தமாட்டார்களா? கபில் ஷர்மா போன்ற செல்வாக்கு ஒருவர் இப்படிச் சொல்வது ஏமாற்றம் அளிக்கிறது. இது துரதிர்ஷ்டவசமானது கூட, ஆனால் இதில், ஆச்சரியப்படுவதற்கில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.