ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகம்... ஜெயம் ரவி மட்டும் எப்படி இந்த மாதிரி படங்களில் நடித்தார்?

Published : Sep 10, 2024, 08:42 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி, இன்று தன்னுடைய 44 வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், இவர் மிகவும் வித்யாசமான மற்றும் தனித்துவமான கதைகளத்தை தேர்வு செய்து நடித்த 10 திரைப்படங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.  

PREV
111
ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகம்... ஜெயம் ரவி மட்டும் எப்படி இந்த மாதிரி படங்களில் நடித்தார்?
Jayam Ravi Movies:

திரையுலகில் அறிமுகமாகும் அனைத்து நடிகர்களுக்குமே ஒரே மாதிரியான கதைகளத்தில் நடிப்பதை விட சவாலான வேடங்களை ஏற்று நடிப்பதில் அதிக ஆர்வம் இருக்கும். ஆனால் அதுபோன்ற கதையும் - கதாபாத்திரங்களும் அமைவது சந்தேகமே. ஆனால் நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் நடிக்க வந்த 21 வருடத்தில் சுமார் 10 திரைப்படங்களில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். 
 

211
Peranmai:

பேராண்மை:

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் 'பேராண்மை'.  இயக்குனர் எஸ் பி ஜனநாதன் இயக்கத்தில் ஆக்சன் அட்வென்ச்சர் திரைப்படமாக வெளியான இந்த படத்தில், ஜெயம் ரவி துருவன் என்கிற ட்ரைபல் ஃபாரஸ்ட் கார்டாக நடித்திருப்பார். இந்தியாவில் இருந்து ஏவப்படும் ராக்கெட் லாஞ்சை தடுக்க தீவிரவாதிகள் முற்படும் நிலையில், அதனை எப்படி நான்கு மாணவிகளுடன் சேர்ந்து முறியடிக்கிறார் என்பதே இந்த படத்தின் கதைகளமாக இருந்தது. இந்த படத்தில் தன்னுடைய வித்தியாசமான மற்றும் துணிச்சனால நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

ஜெயம் ரவியின் சம்பாதித்த சொத்த மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

311
Boologam:

பூலோகம்:

இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படத்தில் ஜெயம் ரவி குத்துச்சண்டை வீரராக நடித்திருந்தார். இந்த திரைப்படம் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'சார்பட்டா' பரம்பரை திரைப்படத்திற்கு முன்பே, நார்த் மெட்ராஸ் வட்டாரத்தில் நடக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்திற்காக தன்னுடைய உடலை ஏற்றி மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ஜெயம் ரவி. படம் பெரிதாக வெற்றிபெறாத நிலையில் ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்படாமல் போனது.

411
Miruthan:

மிருதன்:

தென்னிந்திய சினிமாவில் வெளியான முதல் 'ஜாம்பி' திரைப்படத்தில் நடித்த பெருமையும், நடிகர் ஜெயம் ரவியை தான் சேரும். இயக்குனர் சக்தி சௌந்தரராஜன் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான 'மிருதன்' படத்தில் ஜெயம் ரவியே ஒரு ஜாம்பியாக மாறி இறந்து போவார். கிளைமேக்ஸ் சோகமானது என்றாலும், இப்படி ஒரு கதையை தேர்வு செய்து நடித்த ஜெயம் ரவிக்கு பாராட்டுக்கள் குவிந்தது.

ராதிகாவிடமே பல கோடி பணத்தை ஆட்டையை போட்டவர் விஜயகாந்த்! பிரபலம் கூறிய ஷாக் தகவல்!

511
Vanamagan:

வனமகன்:

நடிகர் ஜெயம் ரவி ஒரு காட்டுவாசியாக நடித்திருந்த திரைப்படம் வனமகன். ஆக்சன் அட்வென்ச்சர் திரைப்படமாக வெளியான இந்த படத்தை, இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கி இருந்தார். சாயிஷா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, போன்ற பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். 2017 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் வித்தியாசமாக வெளியாகி ஜெயம் ரவிக்கு வெற்றிப்படமாக மாறியது. ஜெயம் ரவி ஒரு காட்டு வாசியாகவே மாறி நடித்திருந்தது ஹை லைட்டாக பார்க்கப்பட்டது.

611
bhoomi movie tamil

பூமி:

இயக்குனர் லக்ஷ்மன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பூமி.  இந்த படத்தில் ஜெயம் ரவி ஒரு NASA  சயின்டிஸ்ட்டாக  நடித்திருந்தார். பூமியில் இருந்து நிலவுக்கு சென்று அங்கு தாவரங்களை வளர்க்கும் ஒரு நாசா சயின்டிஸ்ட் தமிழகத்தில் விவசாயிகள் நிலையை பார்த்து கொந்தளித்து, அவர்களுக்காக போராட களத்தில் குதிக்கிறார். இப்படம் சில கடுமையான விமர்சனங்களை சந்தித்து, தோல்வியை தழுவினாலும் இப்படத்தின் கருத்து பாராட்டை பெற்றது.

6 வருட தவம்... குழந்தையை மார்போடு அணைத்தபடி தீபிகா படுகோன்! வைரலாகும் போட்டோ!

711

ஜெயம் ரவி 2018 ஆம் ஆண்டு, இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் நடித்த முதல் ஸ்பேஸ் அட்வென்ச்சர் திரைப்படம் 'டிக் டிக் டிக்'. மேஜிஷியனான ஜெயம் ரவி விண்வெளிக்கு சென்று பூமியை தாக்க வரும் ஒரு வின் கல்லை தகர்ப்பது போல், லாஜிக் இல்லாத கதையாக வெளியான இப்படம் நிவேதா பெத்துராஜின் கவர்ச்சிக்காகவே ஓடியது. இந்த படத்தில் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ஜெயம் ரவியின் மகனாகவே நடித்திருந்தார். 

811
Ponniyin Selvan

பொன்னியின் செல்வன்:

இதற்கு முன் எத்தனையோ வரலாற்று கதைக்களம் கொண்ட திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும்... நீண்ட இடைவெளிக்குப் பின், ஜெயம் ரவி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் தனித்துவமான படமாக பார்க்கப்பட்டது. இந்த படத்தில் ஜெயம் ரவி ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகை சோபிதா தூலிபாலா நடித்திருந்தார். மேலும் த்ரிஷா, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், சரத்குமார், பிரபு, உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். இப்படம் இரண்டு பாகமாக வெளியாகி முதல் பாகம் 500 கோடி வசூலை எட்டிய நிலையில்... இரண்டாவது பாகம் 350 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது.

முதல் படமே ஹிட்... 'ஜெயம்' முதல் 'சைரன்' வரை! ஜெயம் ரவி நடித்த வெற்றிப்படங்கள் இத்தனையா?
 

911
Agilan:

அகிலன்:

நடிகர் ஜெயம் ரவி முழுக்க முழுக்க கடல்,படகு, அதில் நடிக்கும் டிரான்ஸ்போர்ட் போன்ற விஷயங்கள் அதனால் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இதற்க்கு முன்னர் எந்த ஒரு படத்திலும், கடல் குறித்தோ அதில் கடத்தப்படுவது குறித்தோ இவ்வளவு விளக்கமாக காட்டப்பட்டது இல்லை. இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான போதிலும், தோல்வியை தழுவியது. 2023 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை என். கல்யாண கிருஷ்ணன் என்பவர் இயக்கி இருந்தார்.
 

1011
Siren:

சைரன்:

 இந்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியான சைரன் திரைப்படத்தை இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கி இருந்தார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த நிலையில், ஜெயம் ரவி ஒரு ஆம்புலன்ஸ் டிரைவராகவும், பின்னர் தன்னுடைய மனைவியையே கொலை செய்தார் என்கிற வீண் பழி சுமத்தப்பட்டு ஜெயிலுக்கு செல்லும் ஆயுள் கைதியாகவும் நடித்திருந்தார். இதுவரை ஸ்டைலிஷ் ஆன கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்த ஜெயம் ரவி, இந்த படத்தில் 15 வயது மகளுக்கு அப்பாவாகவும், வெள்ளை முடி, வேட்டி சட்டை உடன்... மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வெற்றிப்படங்களில் ஒன்றாக மாறியது.

ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி உண்மையிலேயே மைசூர் மகாராஜா பேத்தியா?

1111
Comali:

கோமாளி:

காமெடி டிராமாவாக கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். காஜல் அகர்வால் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் சுமார் 16 ஆண்டுகள் கோமாவில் இருக்கும் ஹீரோ... கோமாவில் இருந்து வெளியே வந்த பின்னரும் 90'ஸ் கிட்ஸ் மைண்ட் செட்டுடன் இருப்பதும் , பழகுவதும் பார்ப்பவர்களை அவர்களின் சிறு வயது நினைவுக்கு கொண்டு சென்றது. 

click me!

Recommended Stories