ஏற்கனவே பலமுறை அரைக்கப்பட்ட கதை தான் என்றாலும், அதை திரைக்கதையாக மக்களுக்கு கொடுக்கும் பொழுது அதில் தனக்கே உரித்தான கமர்சியல் எலிமெண்ட்கள் பலவற்றை இணைத்து அதில் வெற்றியும் கண்டு இருக்கிறார் வெங்கட் பிரபு. கூடுதல் பலமாக இந்த திரைப்படத்தில் மூத்த தமிழ் திரையுலக நடிகர்கள், நடிகைகள் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா மற்றும் ஜெயராம் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.
அது மட்டும் அல்லாமல் இயக்குனர் வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நடிகர்கள் பிரேம்ஜி அமரன், வைபவ் உள்ளிட்டவர்களும் தங்களுடைய கதாபாத்திரங்களில் மிக நேர்த்தியாக நடித்திருக்கின்றனர். மேலும் கோட் படத்தின் மற்றொரு சிறப்பு அம்சமாக, தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான "மைக்" மோகன் இந்த படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருக்கிறார். பொதுவாக "மைக்" மோகன் தான் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தன்னுடைய சொந்த குரலில் பேசி நடித்ததில்லை.
ஆனால் அண்மை காலமாக அவர் நடித்து வரும் படங்களில் தன்னுடைய சொந்த குரலில் அவர் பேசி நடித்து வருவது அவருக்கு கூடுதல் வரவேற்பை கொடுத்து வருகின்றது.